» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

மாநில அளவிலான கூடைப்பந்து போட்டி: செயிண்ட். தாமஸ் பள்ளி அணி வெற்றி!

சனி 22, ஜனவரி 2022 8:30:14 PM (IST)தூத்துக்குடியில் நடைபெற்ற மாநில அளவிலான கூடைப்பந்து போட்டியில் செயிண்ட். தாமஸ் பள்ளி வீரர்கள் வெற்றி பெற்றனர்..

தூத்துக்குடி காரப்பேட்டை நாடார் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் சார்பாக, 08.01.22 முதல் 12.01.22 வரை மாநில அளவில் பள்ளி மாணவ மாணவியருகிடையே கூடைப்பந்து விளையாட்டுப் போட்டிகளை ஆரிஜின் கூடைப்பந்து கழகம் நடத்தினார்கள். இதில் சென்னை, கோவை, ஈரோடு, சேலம், திருச்சி மதுரை திண்டுக்கல், தஞ்சாவூர் நாகர்கோவில், திருநெல்வேலி போன்ற தமிழகத்தின் தலைசிறந்த பள்ளிகளை சார்ந்த 24 கூடைப்பந்து அணிகள் பங்கு பெற்றன. 

இப்போட்டிகளில் செயிண்ட். தாமஸ் பள்ளி அணி இறுதிப்போட்டியில் சென்னை வேலம்மாள் அணியுடன் மோதி வெற்றி பெற்றது. பின்னர் நடைபெற்ற பரிசளிப்பு விழா நிகழ்ச்சியில், காரப்பேட்டை நாடார் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் செயலர், தலைமை ஆசிரியர், ஆரிஜின் கூடைப்பந்து கழகத்தின் தலைவர், செயலர், பொருளாளர் ஆகியோர் முன்னிலையில் சாதனை வெற்றி பெற்ற செயிண்ட். தாமஸ் பள்ளி அணியினருக்கு வெற்றி கோப்பை மற்றும் ரொக்க பரிசு ரூபாய் 12000. வழங்கி சிறப்பித்தனர்.

பரிசளிப்பு விழாவில் செயிண்ட். தாமஸ் பள்ளியின் தாளாளர் அருட்தந்தை ராயப்பன், பள்ளியின் முதல்வர் ஆஸ்கர் ஆகியோர் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவர்களை வாழ்த்தி பாராட்டியதோடு, வெற்றிக்கனி பெற அரும்பாடுப்பட்டு மாணவர்களை தயார்செய்து வடிவமைத்த பயிற்சியாளர் பொன் மாரியப்பன், ஒருங்கிணைப்பாளர் வேல்ராஜ் ஆகியோரை பாரட்டினர்.  தூத்துக்குடி மாவட்ட கூடைப்பந்து கழக செயலர் பாலமுருகன்,மற்றும் நிர்வாகிகள், செயிண்ட். தாமஸ் பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர்கள், ஏனைய ஆசிரியர்கள்,பள்ளி மாணவர்கள், பெற்றோர்கள், வெற்றி சாதனை படைத்த செயிண்ட். தாமஸ் பள்ளி கூடைப்பந்து விளையாட்டு வீரர்கள் மென்மேலும் தொடர்ந்து வெற்றிகள் பெறவேண்டுமென வாழ்த்தி பாராட்டினர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsThoothukudi Business Directory