» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

விராட் கோலி மகளுக்கு மிரட்டல்: மகளிர் ஆணையம் விசாரணை

செவ்வாய் 2, நவம்பர் 2021 5:38:52 PM (IST)

பாகிஸ்தானிடம் இந்திய அணி தோற்றதால் கேப்டன் விராட் கோலி மகளுக்கு மிரட்டல் தொடர்பாக மகளிர் ஆணையம் போலீசாருக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

டி - 20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில், கடந்த 24ம் தேதி நடந்த போட்டியில் பாகிஸ்தான் அணியிடம், இந்திய அணி தோல்வியடைந்தது. இதனை தொடர்ந்து மர்ம நபர் ஒருவர் ஆன்லைன் மூலம், இந்திய அணி கேப்டன் கோலி மகளுக்கு பாலியல் மிரட்டல் விடுத்தார். இது தொடர்பாக தகவல் அறிந்த டெல்லி மகளிர் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணையை துவக்கி உள்ளது. 

இது தொடர்பாக டெல்லி போலீஸ் துணை கமிஷனருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ள கமிஷன், மிரட்டல் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்ட விவரம், எப்ஐஆர் நகல், கைது செய்யப்பட்ட விவரம் தொடர்பாக 8 ம் தேதிக்குள் அறிக்கை அளிக்கும்படி உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக மகளிர் ஆணைய தலைவர் சுவாதி மாலிவால் கூறுகையில், டுவிட்டர் மூலம் 9 மாத குழந்தைக்கு மிரட்டல் விடுக்கப்பட்ட விதம் அவமானத்திற்குரியது. இந்த வழக்கு தொடர்பாக அனைத்து விவரங்களையும் அளிக்கும்படி போலீசாரிடம் தெரிவித்துள்ளோம் எனக்கூறியுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

பிசிசிஐ தலைவராக நியமனம்? சச்சின் மறுப்பு!

வெள்ளி 12, செப்டம்பர் 2025 11:40:15 AM (IST)

Sponsored Ads




Thoothukudi Business Directory