» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

இந்திய அணியின் தொடக்க வீரர்கள் யார்-யார்?: விராட் கோலி அறிவிப்பு

செவ்வாய் 19, அக்டோபர் 2021 12:20:07 PM (IST)டி20 உலகக் கோப்பைப் போட்டியில் இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ரோஹித் சர்மாவும் கே.எல். ராகுலும் களமிறங்குவார்கள் என இந்திய அணி கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்துடனான பயிற்சி ஆட்டத்தை இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 188 ரன்கள் எடுத்தது. இந்திய அணி 19 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 192 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

டாஸ் நிகழ்வின்போது இந்திய அணியின் பேட்டிங் வரிசை பற்றி விராட் கோலி கூறியதாவது: ஐபிஎல் போட்டிக்கு முன்பு நிலைமை வேறாக இருந்தது. இப்போது மேல்வரிசையில் ராகுலைத் தாண்டி யோசிப்பது கடினம். ரோஹித் சர்மா உலகத் தரமான வீரர். அவர் தொடக்க வீரராக அபாரமாக விளையாடி வருகிறார். நான் 3-ம் நிலை வீரராக விளையாடுகிறேன். இப்போதைக்கு இது மட்டுமே என்னால் கூற முடியும் என்றார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsThoothukudi Business Directory