» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு
கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு: லசித் மலிங்கா அறிவிப்பு
புதன் 15, செப்டம்பர் 2021 12:24:19 PM (IST)
கிரிக்கெட்டில் இருந்து முழுவதுமாக விடைபெறுவதாக இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்கா அறிவித்துள்ளார்.

ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் மட்டும் கவனம் செலுத்த முடிவு செய்த மலிங்கா, கடந்த 2011-ம் ஆண்டு டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்றார். அதன்பின் கடந்த 2019-ம் ஆண்டு ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார்.இந்த நிலையில் தற்போது டி20 போட்டியில் இருந்தும் ஓய்வு பெற்றுள்ளார். இதன்மூலம் அனைத்து வகை கிரிக்கெட்டில் இருந்து மலிங்கா விடைபெற்றுள்ளார்.
38 வயதாகும் மலிங்கா 2004-ம் ஆண்டு ஜூலை 1-ந்தேதி டெஸ்ட் போட்டியிலும், ஜூலை 17-ந்தேதி ஒருநாள் போட்டியிலும், 2006-ம் ஆண்டு ஜூன் 15-ந்தேதி டி20 போட்டியிலும் இலங்கை அணிக்காக அறிமுகம் ஆனார். 30 டெஸ்ட் போட்டிகளில் 101 விக்கெட்டுகளும், 226 ஒருநாள் போட்டிகளில் 338 விக்கெட்டுகளும், 84 டி20 போட்டிகளில் 107 விக்கெட்டுகளும் வீழ்த்தியுள்ளார். டி20 கிரிக்கெட்டில் 6 ரன்கள் விட்டுக்கொடுத்து ஐந்து விக்கெட் வீழ்த்தியது அவரின் சிறந்த பந்து வீச்சாகும்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

டெஸ்ட் கிரிக்கெட்டில் 200 விக்கெட்: கேசவ் மகராஜ் வரலாற்று சாதனை!!
திங்கள் 30, ஜூன் 2025 12:39:44 PM (IST)

இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் : பும்ரா நீக்கம்!
வெள்ளி 27, ஜூன் 2025 10:51:40 AM (IST)

ரிங்கு சிங் - பிரியா சரோஜ் எம்.பி. திருமணம் ஒத்திவைப்பு..?
வியாழன் 26, ஜூன் 2025 5:36:32 PM (IST)

லீட்ஸ் டெஸ்ட்: இந்தியாவை வீழ்த்தியது இங்கிலாந்து!
புதன் 25, ஜூன் 2025 8:50:17 AM (IST)

இரு இன்னிங்சிலும் சதம்... ரிஷப் பண்ட் சாதனை!
செவ்வாய் 24, ஜூன் 2025 10:09:43 AM (IST)

யாரும் வேண்டுமென்றே கேட்சுகளை விடுவதில்லை : பும்ரா பெருந்தன்மை!!
திங்கள் 23, ஜூன் 2025 4:59:27 PM (IST)
