» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு: டெல்லியில் பாராட்டு விழா!

செவ்வாய் 10, ஆகஸ்ட் 2021 11:13:04 AM (IST)ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற வீரர்களுக்கு டெல்லியில் பாராட்டு விழா நடைபெற்றது. 

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இந்தியா ஒரு தங்கம், 2 வெள்ளி, 4 வெண்கலம் என 7 பதக்கங்களை பெற்றது. ஒலிம்பிக் போட்டி நிறைவடைந்த நிலையில், இந்திய வீரர்-வீராங்கனைகள் நேற்று நாடு திரும்பினர். அவர்களுக்கு டெல்லி விமான நிலையத்தில் வரவேற்பு அளிக்கப்பட்டது. குறிப்பாக பதக்கம் வென்ற வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. 

மேலும், தக்கம் வென்ற வீரர்களுக்கு இந்திய விளையாட்டு ஆணையம் சார்பில் டெல்லியில் பாராட்டு விழா நடத்தப்பட்டது. டெல்லி அசோகா ஹோட்டலில் நடைபெற்ற இவ்விழாவில் மத்திய விளையாட்டுத்துறை மந்திரி அனுராக் தாகூர், இணை மந்திரி நிசித் பிரமாணிக், சட்டத்துறை மந்திரி கிரண் ரிஜிஜு ஆகியோர் கலந்துகொண்டு விளையாட்டு வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்களுக்கு நினைவுப்பரிசுகள் வழங்கி வாழ்த்தினர்.

விழாவில் விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாகூர் பேசுகையில், ‘நீரஜ் சோப்ரா, பஜ்ரங் புனியா, லவ்லினா முதல் மற்ற வீரர்-வீராங்கனைகள் அனைவரும் புதிய இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்துகிறார்கள். அவர்கள் ஒரு புதிய இந்தியாவின் புதிய ஹீரோக்கள் ஆவர். விளையாட்டு துறைக்கு சாத்தியமான அனைத்து வசதிகளும் ஏற்பாடு செய்யப்படுவதை உறுதி செய்வோம்’ என்றார்.

இதேபோல் பதக்கம் வென்ற வீரர்கள் தங்கள் அனுபவங்களை பகிர்ந்துகொண்டதுடன், அனைவருக்கும் நன்றி தெரிவித்தனர்.  தங்கப்பதக்கம் வென்ற நீரஜ் சோப்ரா மேடையில் ஏறியபோது அனைவரும் எழுந்து நின்று கைதட்டி ஆரவாரம் செய்தனர். அவருக்கு நினைவுப்பரிசு வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது. அப்போது பேசிய நீரஜ் சோப்ரா, இந்த தங்கப் பதக்கம் எனக்கு மட்டும் சொந்தமானதல்ல, ஒட்டுமொத்த தேசத்துக்குமானது என்றார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsThoothukudi Business Directory