» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

ஆடவர் மல்யுத்தம்: இந்தியாவின் ரவிக்குமார் தாஹியா வெள்ளி பதக்கம் வென்றார்!

வியாழன் 5, ஆகஸ்ட் 2021 5:01:43 PM (IST)

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவின் ரவிக்குமார் தாஹியா வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார்.

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் மல்யுத்தத்தில் ஆடவருக்கான 57 கிலோ பிரிவில் இந்தியாவின் ரவிக்குமார் தாஹியா இறுதிச் சுற்றுக்கு முன்னேறினார். இறுதிச்சுற்றில் தாஹியா, நடப்பு உலக சாம்பியனான ரஷியாவின் (ஆர்.ஓ.சி.) ஜாவுர் உகுயேவை எதிர்கொண்டார்.

ரஷிய வீரர் சிறப்பாக விளையாடி 7-4 என்கிற புள்ளிக்கணக்கில் இந்திய வீரரைத் தோற்கடித்தார். இதையடுத்து ரவிக்குமார் தாஹியாவுக்கு வெள்ளிப் பதக்கம் கிடைத்துள்ளது. டோக்கியோ ஒலிம்பிக்ஸில் இந்திய அணிக்குக் கிடைத்துள்ள 5-வது பதக்கம் இது. இதுவரை 2 வெள்ளி, 3 வெண்கலப் பதக்கங்களை இந்திய அணி வென்றுள்ளது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsThoothukudi Business Directory