» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு
ஐக்கிய அரபு அமீரகம், ஓமனில் டி20 உலகக் கோப்பை: ஐசிசி அறிவிப்பு
செவ்வாய் 29, ஜூன் 2021 5:21:19 PM (IST)
ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் டி20 உலகக் கோப்பை நடைபெறும் என ஐசிசி அறிவித்துள்ளது.
இந்தியாவில் வரும் அக்டோபா் - நவம்பா் காலகட்டத்தில் நடத்தப்படவிருந்த டி20 உலகக் கோப்பை போட்டி, கரோனா சூழல் காரணமாக ஐக்கிய அரபு அமீரகத்துக்கு (யுஏஇ) மாற்றப்படுவதாக பிசிசிஐ தலைவா் சௌரவ் கங்குலி தெரிவித்திருந்தார். முன்னதாக, போட்டியை நடத்துவது தொடா்பாக பிசிசிஐக்கு ஐசிசி 4 வார அவகாசம் வழங்கியதை அடுத்து இந்த முடிவே பரவலாக ஊகிக்கப்பட்ட நிலையில், பிசிசிஐ நேற்று உறுதி செய்தது.
இந்நிலையில் டி20 உலகக் கோப்பை - ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் அக்டோபர் 17 முதல் நவம்பர் 14 வரை நடைபெறும் என ஐசிசி இன்று அறிவித்துள்ளது. துபை, அபு தாபி, ஷார்ஜா, ஓமன் என நான்கு பகுதிகளில் டி20 உலகக் கோப்பை நடைபெறவுள்ளது. வங்கதேசம், இலங்கை, அயர்லாந்து, நெதர்லாந்து, ஸ்காட்லாந்து, நமிபியா, ஓமன், பப்புவா நியூ கினியா என 8 அணிகள் முதல் சுற்று ஆட்டத்தில் கலந்துகொள்ளவுள்ளன.
ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரு இடங்களைப் பிடிக்கும் இரு அணிகள் சூப்பர் 12 சுற்றில் இதர எட்டு அணிகளுடன் சேர்ந்துவிடும். முதல் சுற்று ஆட்டங்கள் ஐக்கிய அரபு அமீரகத்திலும் ஓமனிலும் நடைபெறும். இந்தப் போட்டி இந்தியாவில் நடைபெறாவிட்டாலும் இந்தியாவின் சார்பாகவே இப்பகுதிகளில் டி20 உலகக் கோப்பை நடைபெறுகிறது. டி20 உலகக் கோப்பைக்கான அட்டவணையை ஐசிசி விரைவில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மகளிர் டி20 உலகக் கோப்பை: இலங்கையை வீழ்த்தி இங்கிலாந்து அபார வெற்றி!
சனி 13, ஜூன் 2026 11:51:44 AM (IST)

உலகக் கோப்பை கால்பந்து 2026 கோலாகலத் தொடக்கம்: மெக்சிகோ, அமெரிக்கா அணிகள் அபார வெற்றி!
சனி 13, ஜூன் 2026 10:20:39 AM (IST)

அறிமுக போட்டியிலேயே அசத்திய மானவ் சுதர்: ஆப்கானிஸ்தானை வீழ்த்தி இந்தியா இமாலய வெற்றி
செவ்வாய் 9, ஜூன் 2026 8:25:54 AM (IST)

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டி: கே.எல்.ராகுல், சுப்மன் கில் அதிரடி சதம்!
சனி 6, ஜூன் 2026 5:26:51 PM (IST)

இளம் வயதில் இந்திய அணியில் இடம்பிடித்தார் சூர்யவன்ஷி : சச்சின் சாதனை முறியடிப்பு!
சனி 6, ஜூன் 2026 4:47:09 PM (IST)

இந்திய டி20 அணியின் கேப்டனாக ஷ்ரேயாஸ் ஐயர் நியமனம் ஏன்? அஜித் அகர்கர் விளக்கம்!
சனி 6, ஜூன் 2026 4:41:43 PM (IST)


