» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

கரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார் ரவி சாஸ்திரி!!

செவ்வாய் 2, மார்ச் 2021 5:47:16 PM (IST)

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, கரோனா தடுப்பூசியை ஆமதாபாத்தில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் செலுத்திக் கொண்டாா்.

நாட்டில் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் கடந்த ஜனவரி மாதம் 16-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகின்றன. மருத்துவா்கள் உள்ளிட்ட சுகாதாரப் பணியாளா்களுக்கும் முன்களப் பணியாளா்களுக்கும் முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசி செலுத்தப்பட்டு வந்தது. இத்தகைய சூழலில், நாட்டிலுள்ள 60 வயதுக்கு மேற்பட்டோா், இணைநோய் உள்ள 45 வயதுக்கு மேற்பட்டோருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் திங்கள்கிழமை தொடங்கின. அதில் பிரதமா் மோடி தில்லியிலுள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டாா்.

இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, கரோனா தடுப்பூசியின் முதல் தவணையை ஆமதாபாத்தில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் செலுத்திக் கொண்டார். இதுகுறித்த தகவலையும் புகைப்படத்தையும் ட்விட்டரில் அவர் பகிர்ந்துள்ளார். கடந்த ஜன.16 முதல் மருத்துவத் துறையினா், முன்களப் பணியாளா்களுக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. திங்கள்கிழமை இரவு நிலவரப்படி நாட்டில் இதுவரை 1.47 கோடி பேருக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsThoothukudi Business Directory