» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
போதைப்பொருட்களை வைத்திருந்த இளைஞர் கைது: போலீசாரை மிரட்டித் தற்கொலை முயற்சி!
சனி 13, ஜூன் 2026 8:17:56 AM (IST)
கோவில்பட்டியில் கஞ்சா மற்றும் மெத்தம்பேட்டமைன் போன்ற போதைப் பொருட்களை வைத்திருந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி மந்திதோப்பு சாலையில் போதைப்பொருட்கள் விற்பனை நடைபெறுவதாகக் கோவில்பட்டி மேற்கு காவல் நிலையத்திற்குக் ரகசியத் தகவல் கிடைத்தது. அதன் பேரில், கடந்த வியாழக்கிழமை இரவு காவல் உதவி ஆய்வாளர் நியூட்டன் ஜெபராஜ் தலைமையில் போலீசார் அப்பகுதியில் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, மந்திதோப்பு சாலை இந்திரா காலனியில் உள்ள ஒரு திருமண மண்டபம் அருகே நின்று கொண்டிருந்த வாலிபர் ஒருவர், ரோந்து வந்த போலீசாரைக் கண்டதும் தப்பியோட முயன்றார். போலீசார் அவரைச் சுற்றி வளைத்தபோது, அவர் போலீசாரை அவதூறாகப் பேசி, தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து மிரட்டல் விடுத்துள்ளார்.
இருப்பினும், போலீசார் அவரை அதிரடியாகப் பிடித்துச் சோதனையிட்டு விசாரணை நடத்தினர். அதில், அவர் கோவில்பட்டி துளசிங்க நகர் பகுதியைச் சேர்ந்த தங்கராஜ் மகன் விக்னேஸ்வரன் (29) என்பது தெரியவந்தது. மேலும், அவரிடமிருந்து விற்பனைக்காக மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 150 கிராம் கஞ்சா மற்றும் 20 கிராம் மெத்தம்பேட்டமைன் ஆகிய போதைப்பொருட்களைப் போலீசார் பறிமுதல் செய்தனர்.
இதையடுத்து, அவரை போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்ல முயன்றபோது, விக்னேஸ்வரன் திடீரென தரையில் கிடந்த கல்லை எடுத்துத் தனது நெற்றியில் பலமாகத் தாக்கித் தற்கொலைக்கு முயன்றார். இதில் காயமடைந்த அவரை மீட்ட போலீசார், உடனடியாகக் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
சிகிச்சைக்குப் பின், இச்சம்பவம் குறித்துக் கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசார் விக்னேஸ்வரன் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து, அவரை நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

திருச்செந்தூர் கோவிலில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்: 4 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம்!
ஞாயிறு 14, ஜூன் 2026 8:19:32 PM (IST)

கூட்டுறவு வங்கியில் மோசடி செய்யப்பட்ட நகைகள் மீது 4 மாதங்களுக்குள் நடவடிக்கை: அனிதா ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ உறுதி
ஞாயிறு 14, ஜூன் 2026 8:04:10 PM (IST)

அதிமுகவிலிருந்து விலகினார் நடிகை கௌதமி: எடப்பாடி பழனிசாமிக்குக் கடிதம்!
ஞாயிறு 14, ஜூன் 2026 1:03:58 PM (IST)

தூக்குத்தண்டனை கைதிகளுக்குச் சிறையில் முதல் வகுப்பு அறை ஒதுக்க கோரிய மனு தள்ளுபடி!
ஞாயிறு 14, ஜூன் 2026 9:06:46 AM (IST)

புகார் கொடுக்க வந்த பெண்ணுக்குத் தொல்லை : போலீஸ் ஏட்டு அதிரடி பணி இடைநீக்கம்!
ஞாயிறு 14, ஜூன் 2026 8:55:01 AM (IST)

ரஜினிகாந்த் பெயர், புகைப்படத்தை அமைப்புகளுக்குப் பயன்படுத்தத் தடை: தலைமை ரசிகர் மன்றம் அறிக்கை
ஞாயிறு 14, ஜூன் 2026 8:47:41 AM (IST)


