» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

கூட்டுறவு வங்கியில் மோசடி செய்யப்பட்ட நகைகள் மீது 4 மாதங்களுக்குள் நடவடிக்கை: அனிதா ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ உறுதி

ஞாயிறு 14, ஜூன் 2026 8:04:10 PM (IST)



குரும்பூர் கூட்டுறவு வங்கியில் மோசடி செய்யப்பட்ட நகைகள் மீது 4 மாதங்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அங்கமங்கலத்தில் நடந்த ஆய்வில் அனிதா ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ உறுதியளித்துள்ளார்.

அங்கமங்கலம் பஞ்., அலுவலகத்தில் நேற்று அனிதா ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ ஆய்வு செய்தார். அப்போது குரும்பூர் கூட்டுறவு வங்கியில் நடந்த மோசடியில் நகை மற்றும் பணத்தை பறிகொடுத்தவர்கள் எம்.எல்.ஏவிடம் முறையிட்டனர். தொடர்ந்து டெல்டா விவசாயிகளுக்கு வழங்கப்படுவதுபோல் தாமிரபரணி பாசன விவசாயிகளுக்கும் குறுவை கார் சாகுபடி சிறப்பு தொகுப்பான ஏக்கருக்கு ரூ.4 ஆயிரம் வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். இதேபோல் குரும்பூர் பகுதி பொதுமக்கள் சாலை வசிதி, மின்விளக்கு வசதி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து மனு அளித்தனர். 

மனுவை பெற்றுக்கொண்ட அனிதா ராதாகிருஷ்ணன், கூட்டுறவு வங்கி மோசடி குறித்து தொடர்ந்து விசாரணை நடந்து வருவதால் இன்னும் 4 மாத காலத்திற்குள் இந்த பிரச்னை மீது நடவடிக்கை எடுத்து நகை மற்றும் பணத்தை  மீட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்படும். திமுக ஆட்சியில் டெல்டா விவசாயிகளுக்கு வழங்கப்படுவதைபோல், தாமிரபரணி பாசன விவசாயிகளுக்கும் குறுவை கார் சாகுபடி சிறப்பு தொகுப்பான ஏக்கருக்கு ரூ.4 ஆயிரம் வழங்கப்பட்டது. அதேபோல் வழங்க நடவடிக்கை எடுப்பேன் என்றார். 

இதில் ஏரல் தாசில்தார் செல்வக்குமார், ஆழ்வை., வட்டார வளர்ச்சி அலுவலர் ரஞ்சித், அங்கமங்கலம் பஞ்., செயலாளர் மாரிராஜ், வி.ஏ.ஓ. மைக்கேல் அந்தோணி, முன்னாள் யூனியன் சேர்மன் ஜனகர், மாவட்ட திமுக இளைஞரணி அமைப்பாளர் ராமஜெயம், ஆழ்வை., மத்திய ஒன்றிய செயலாளர் நவீன்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory