» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
கோடைகாலத்திலும் தடையின்றி நிறைவான குடிநீர் விநியோகம்: மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு!
செவ்வாய் 9, ஜூன் 2026 4:48:12 PM (IST)

தூத்துக்குடி மாநகராட்சிப் பகுதிகளில் கோடைகாலத்திலும் பொதுமக்களுக்கு எவ்வித தட்டுப்பாடுமின்றி நிறைவாகக் குடிநீர் வழங்கப்பட்டு வருவதாக மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாநகராட்சி அழகேசபுரம் பகுதியில் தற்பொழுது நடைபெற்று வரும் புதிய குடிநீர் குழாய் அமைக்கும் பணிகள் மற்றும் அண்ணா நகர் பகுதியில் புதிதாகக் குடிநீர் குழாய்கள் அமைப்பதற்கான பூர்வாங்கப் பணிகள் ஆகியவற்றை மேயர் ஜெகன் பெரியசாமி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது அண்ணா நகர் பகுதி பொதுமக்களிடம் மாநகராட்சியின் குடிநீர் விநியோகம் மற்றும் செயல்பாடுகள் குறித்தும் அவர் கனிவோடு கேட்டறிந்தார். ஆய்வுக்குப் பின் செய்தியாளர்களிடம் மேயர் ஜெகன் பெரியசாமி கூறியதாவது: "தூத்துக்குடி மாநகராட்சியின் ஒட்டுமொத்த 60 வார்டுகளிலும் உள்ள பொதுமக்களுக்குக் குடிநீர் தடையின்றி விநியோகிக்கப்பட்டு வருகிறது.
முதன்மை நீரேற்று நிலையங்களிலிருந்து அதிக வேகத்தில் தண்ணீர் விநியோகம் செய்யப்படும் போது, ஒருசில இடங்களில் ஏற்படும் திடீர் குழாய் உடைப்புகள் மின்சார மற்றும் மாநகராட்சி ஊழியர்களால் உடனுக்குடன் முழுமையாகக் கண்காணிக்கப்பட்டுச் சரி செய்யப்படுகின்றன.
வளர்ந்து வரும் மாநகரத்தின் மக்கள் தொகைக்கேற்ப, வல்லநாடு மற்றும் கலியாவூர் ஆகிய நீராதார இடங்களிலிருந்து பெறப்படும் குடிநீர், மாநகராட்சியில் உள்ள 39 மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகளில் முறைப்படி ஏற்றப்படுகிறது. இதன் மூலம் சில பகுதிகளில் தினசரியும், மற்ற பகுதிகளில் 2 நாட்களுக்கு ஒருமுறையும் குறிப்பிட்ட நேரங்களின்படி மாநகராட்சி ஊழியர்கள் மூலம் குடிநீர் விநியோகம் முறைப்படுத்தப்பட்டு வருகிறது.
கோடைகாலக் கடுமையான வறட்சியிலும், நீர்வரத்து குறைவாக உள்ள நிலையிலும் அனைவருக்கும் தடையின்றி நிறைவாகக் குடிநீர் வழங்கி வருகிறோம். பொதுமக்கள் தண்ணீரை வீணாக்காமல் நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இக்கோடைகாலத்தைக் கடந்து, அடுத்து வரும் மழைக்காலத்தை எதிர்கொள்வதற்கான அனைத்து முன்னெச்சரிக்கை மற்றும் ஆயத்தப் பணிகளையும் மாநகராட்சி தற்பொழுதே தீவிரமாக மேற்கொண்டுள்ளது. மாநகராட்சிப் பகுதி மக்களின் நலன் கருதி, நேர்மையான வழியில் முழுமையான அர்ப்பணிப்புடன் தொடர்ந்து பணியாற்றி வருகிறோம்" என்று தெரிவித்தார்.
ஆய்வின் போது மாநகராட்சி கவுன்சிலர்கள் ஜான்சிராணி, கனகராஜ், பகுதி செயலாளர் ரவீந்திரன், தலைமைச் செயற்குழு உறுப்பினர் ராஜா, இளநிலைப் பொறியாளர் லெனின், வட்டச்செயலாளர்கள் ரவீந்திரன், முனியசாமி மற்றும் போல்பேட்டை பகுதி பிரதிநிதி ஜேஸ்பர் ஞானமார்ட்டின் உட்பட மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் முக்கியப் பிரமுகர்கள் பலர் உடனிருந்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

திருச்செந்தூர் கடற்கரையில் ஒதுங்கும் ஜெல்லி மீன்கள் : மீன்வளத்துறை அதிகாரிகள் ஆய்வு
புதன் 17, ஜூன் 2026 7:32:01 AM (IST)

வ.உ.சி. துறைமுகத்தில் ரூ.4.51 கோடி ஓய்வூதிய நிதி மோசடி: அதிகாரிகள் 7 பேர் மீது சி.பி.ஐ. வழக்கு!
புதன் 17, ஜூன் 2026 7:22:55 AM (IST)

தமிழ்நாட்டின் கடன் 5 ஆண்டுகளில் 10 லட்சம் கோடியாக உயர்வு: வெள்ளை அறிக்கையில் அதிர்ச்சி தகவல்!
செவ்வாய் 16, ஜூன் 2026 9:32:03 PM (IST)

சிறுமிகளை பாலியல் தொந்தரவு செய்தவருக்கு 7 ஆண்டு கடுங்காவல் சிறை: தூத்துக்குடி போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு
செவ்வாய் 16, ஜூன் 2026 9:26:19 PM (IST)

குழந்தையின் பிரேதப் பரிசோதனை இடத்தில் தவெக எம்எல்ஏ பேரம்? - கனிமொழி எம்பி குற்றச்சாட்டு!
செவ்வாய் 16, ஜூன் 2026 5:44:39 PM (IST)

அத்தியாவசியப் பொருட்கள் விலை உயர்வு: சுங்கக் கட்டணத்தை ரத்து செய்ய வேல்முருகன் வலியுறுத்தல்!
செவ்வாய் 16, ஜூன் 2026 5:25:24 PM (IST)


