» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
இசையமைப்பாளர் இளையராஜா பிறந்த நாள் : திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து!
செவ்வாய் 2, ஜூன் 2026 10:48:45 AM (IST)

இசையமைப்பாளர் இளையராஜாவின் பிறந்த நாளை முன்னிட்டு அவருக்கு முன்னாள் முதல்வர் - திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இசையமைப்பாளர் இளையராஜா தனது பிறந்த நாளை இன்று கொண்டாடுகிறார். அவருக்கு அரசியல் தலைவர்கள், திரையுலகினர், ரசிகர்கள் என பல்வேறு தரப்பினர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், இளையராஜா, ரஜினிகாந்த், கமல்ஹாசனுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து மு.க. ஸ்டாலின் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அவர் தெரிவித்திருப்பதாவது: "இசையால் நம்மை என்றென்றும் ஆளும் இசைஞானிக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள்! கருணாநிதி மீது கொண்ட மதிப்பின் காரணமாகத் தனது பிறந்தநாளையே ஒரு நாள் முன்னதாக மாற்றிக் கொண்டவர். ‘இசைஞானி’ என்று கருணாநிதி பட்டம் சூட்டினார். அன்னக்கிளியில் தொடங்கி சிம்பொனி வரையிலான ராஜாவின் ராஜாங்கம் தொடரட்டும். ராஜா என்றும் ராஜாதான்!” எனக் குறிப்பிட்டுள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

விபத்தில் இறந்த சிங்கப்பூர் இன்ஜினியர் குடும்பத்திற்கு ரூ.1.33 கோடி இழப்பீடு: தூத்துக்குடி நீதிமன்றம் உத்தரவு!
புதன் 3, ஜூன் 2026 4:37:51 PM (IST)

நெல்லை மாவட்டத்தில் நாளை பள்ளிகள் திறப்பு: ஆட்சியர் ஆனந்த் மோகன் அதிரடி ஆய்வு!
புதன் 3, ஜூன் 2026 3:41:32 PM (IST)

தமிழகத்தின் புதிய டி.ஜி.பி. மகேஷ்குமார் அகர்வால் பதவியேற்பு: குற்றங்களைத் தடுக்க உறுதி!
புதன் 3, ஜூன் 2026 3:11:35 PM (IST)

ஜெராக்ஸ் எடுக்க வந்த பெண்களை ஆபாசமாக வீடியோ எடுத்த கடை உரிமையாளர் கைது!
புதன் 3, ஜூன் 2026 11:23:16 AM (IST)

தூத்துக்குடி அனல்மின் நிலைய ஒப்பந்தங்களுக்கு கமிஷனா? – சங்கப் பொருளாளர் மறுப்பு - முதல்வருக்கு கடிதம்!
புதன் 3, ஜூன் 2026 11:14:48 AM (IST)

தமிழகம் முழுவதும் 28 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்: ஆளுநரின் செயலராக சஜ்ஜன்சிங் சவான் நியமனம்
புதன் 3, ஜூன் 2026 10:43:39 AM (IST)


