» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
இளம்பெண் பாலியல் வன்கொடுமை வழக்கு: தவெக நிர்வாகிகள் இருவர் கைது
செவ்வாய் 2, ஜூன் 2026 8:08:51 AM (IST)
இளம்பெண்ணுக்குக் குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்துக் கூட்டுப் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் 2 பேரைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே ஆறுமுகமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் பாலமுருகன் (29). இவர் த.வெ.க. மேற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளராகப் பொறுப்பில் உள்ளார். இவருடைய நண்பர் இராமநாதபுரம் பகுதியைச் சேர்ந்த ஜெயபால் (27), இவரும் த.வெ.க. நிர்வாகியாக உள்ளார்.
இவர்கள் இருவரும் ஸ்ரீவைகுண்டம் அருகேயுள்ள ஒரு பகுதியைச் சேர்ந்த 33 வயது இளம்பெண்ணுக்கு வேலை வாங்கித் தருவதாகக் கூறி, கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு காரில் அழைத்துச் சென்றுள்ளனர். பின்னர், அந்த இளம்பெண்ணை இராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடியில் உள்ள ஒரு தனியார் விடுதியில் தங்க வைத்துள்ளனர்.
அப்போது அந்த இளம்பெண்ணுக்குக் குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து, இருவரும் கூட்டுப் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. மயக்கம் தெளிந்த பின்னர் தனக்கு நேர்ந்த கொடூரத்தை அறிந்து அந்த இளம்பெண் அதிர்ச்சியடைந்தார். பின்னர் அங்கிருந்து தப்பி வந்த அவர், இது குறித்து ஸ்ரீவைகுண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இளம்பெண்ணின் புகாரின் பேரில், பாலமுருகன் மற்றும் ஜெயபால் ஆகியோர் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, இருவரையும் கைது செய்தனர். பின்னர் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர். இளம்பெண்ணை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த த.வெ.க. நிர்வாகிகள் கைது செய்யப்பட்ட இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

விபத்தில் இறந்த சிங்கப்பூர் இன்ஜினியர் குடும்பத்திற்கு ரூ.1.33 கோடி இழப்பீடு: தூத்துக்குடி நீதிமன்றம் உத்தரவு!
புதன் 3, ஜூன் 2026 4:37:51 PM (IST)

நெல்லை மாவட்டத்தில் நாளை பள்ளிகள் திறப்பு: ஆட்சியர் ஆனந்த் மோகன் அதிரடி ஆய்வு!
புதன் 3, ஜூன் 2026 3:41:32 PM (IST)

தமிழகத்தின் புதிய டி.ஜி.பி. மகேஷ்குமார் அகர்வால் பதவியேற்பு: குற்றங்களைத் தடுக்க உறுதி!
புதன் 3, ஜூன் 2026 3:11:35 PM (IST)

ஜெராக்ஸ் எடுக்க வந்த பெண்களை ஆபாசமாக வீடியோ எடுத்த கடை உரிமையாளர் கைது!
புதன் 3, ஜூன் 2026 11:23:16 AM (IST)

தூத்துக்குடி அனல்மின் நிலைய ஒப்பந்தங்களுக்கு கமிஷனா? – சங்கப் பொருளாளர் மறுப்பு - முதல்வருக்கு கடிதம்!
புதன் 3, ஜூன் 2026 11:14:48 AM (IST)

தமிழகம் முழுவதும் 28 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்: ஆளுநரின் செயலராக சஜ்ஜன்சிங் சவான் நியமனம்
புதன் 3, ஜூன் 2026 10:43:39 AM (IST)


