» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

சிங்கப்பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத தவெக ஆட்சி தூய சக்தியா? நயினார் நாகேந்திரன் விமர்சனம்!

திங்கள் 1, ஜூன் 2026 5:54:36 PM (IST)

சிங்கப்பெண்ணுக்கே பாதுகாப்பை உறுதி செய்யும் திறனற்ற ஆட்சி தான் தூய சக்தியா? என்று பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கடுமையாக விமர்சித்து உள்ளார்.

ஆறுமுகநேரி காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த காவல் ஆய்வாளர் மீது, சிங்கப் பெண் அதிரடிப்படையில் இடம்பெற்றுள்ள பெண்காவலருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்த நிலையில், அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் புதிதாக பொறுப்பேற்று கொண்ட தவெக அரசு, பெண்களின் பாதுகாப்பிற்காக சிங்கப்பெண் படையை அமைத்து உள்ளது. ஆனால் அந்த சிறப்பு படையில் இடம்பெற்றுள்ள பெண் போலீசுக்கே பாதுகாப்பில்லை என பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் சாடி உள்ளார்.

இது தொடர்பான அறிக்கையில் அவர் கூறி இருப்பதாவது, தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி காவல் நிலையத்தில், சிங்கப்பெண் அதிரடிப்படையிலுள்ள பெண் காவலருக்கு காவல் ஆய்வாளர் ஒருவர் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக எழுந்துள்ள புகார் மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது.

பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக தொடங்கப்பட்ட திட்டத்தின் கீழ் காக்கி சட்டை அணிந்த பெண்ணுக்கே பாதுகாப்பை உறுதி செய்யும் திறனற்ற ஆட்சி தான் தூய சக்தியா? என்று கேள்வி எழுப்பி இது என்ன ஒரு வெட்கக்கேடு என கடுமையாக விமர்சித்து உள்ளார்.

"நான் உங்கள் அண்ணன்" என மேடைக்கு மேடை முழங்கும் முதல்வர் விஜய் அவர்கள், முதலில் இந்த புகாரைத் தீர விசாரித்து, குற்றச்சாட்டு உண்மையாக இருக்கும் பட்சத்தில் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், விளம்பரத் திட்டங்களை அறிமுகம் செய்வதோடு நில்லாது, தமிழகப் பெண்களுக்கான பாதுகாப்பை உண்மையாக உறுதி செய்வதிலும் கவனம் செலுத்த வேண்டும் என்று நயினார் நாகேந்திரன் வலியுறுத்தி உள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory