» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தூத்துக்குடி மாநகராட்சி பள்ளி சாதனை: பிளஸ் 2 தேர்வில் 6-வது முறையாக 100% தேர்ச்சி!!
வெள்ளி 8, மே 2026 3:09:43 PM (IST)

பிளஸ் 2 பொதுத்தேர்வில் தூத்துக்குடி சாமுவேல் புரம் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி தொடர்ந்து 6-வது முறையாக நூறு சதவீத தேர்ச்சியைப் பெற்று சாதனை படைத்துள்ளது.
இப்பள்ளியில் பயின்ற மாணவி டேனிகா மேத்யூ 600-க்கு 569 மதிப்பெண்கள் பெற்று பள்ளி அளவில் முதலிடம் பிடித்துள்ளார். இவர் இதே பள்ளியில் வேதியியல் ஆசிரியையாகப் பணியாற்றும் . பிளோரிடா மற்றும் புன்னக்காயல் புனித ஜோசப் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் ஜெபசிங் ஆகியோரின் மகள் ஆவார்.
மாணவன் மாரி சரண் 568 மதிப்பெண்கள் பெற்று இரண்டாம் இடம் பிடித்துப் பள்ளிக்குப் பெருமை சேர்த்துள்ளார். இவரது தந்தை ஆறுமுகநாதன் ஒரு டெக்கரேஷன் கடையில் தொழிலாளியாகப் பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
பள்ளியின் சாதனை குறித்துத் தலைமையாசிரியை ரூஃபினா ரொட்ரிகா கூறியதாவது: "கடந்த 2021-ஆம் ஆண்டு முதல் பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வுகளில் இப்பள்ளி தொடர்ந்து 6-வது முறையாக 100 சதவீத தேர்ச்சியைப் பெற்று வருகிறது. ஆசிரியர்களின் கடின உழைப்பும், மாணவ-மாணவியரின் முழு ஒத்துழைப்புமே இந்த வெற்றிக்குக் காரணம். பள்ளியின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும் மாநகராட்சி மேயர், ஆணையர் மற்றும் அதிகாரிகளுக்கும், இறைவனின் கிருபைக்கும் எங்களது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம் என்றார்.
அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளுக்கு இணையாக மாநகராட்சி பள்ளி தொடர்ந்து சாதனை படைத்து வருவது அப்பகுதி மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தமிழகக் கனிம வளங்களை அழிக்க பாஜக சதி? சுற்றுச்சூழல் அமைப்புகள் கடும் கண்டனம்!
வெள்ளி 8, மே 2026 9:03:22 PM (IST)

தமிழக முதல்வராகிறார் விஜய்: 118 எம்.எல்.ஏ-க்கள் ஆதரவுடன் ஆளுநரைச் சந்தித்து உரிமை கோரினார்!
வெள்ளி 8, மே 2026 8:11:36 PM (IST)

பணியிடங்களில் பெண்களுக்கு பாதுகாப்பு: மே 31-க்குள் அறிக்கை தாக்கல் செய்ய ஆட்சியர் உத்தரவு!
வெள்ளி 8, மே 2026 4:51:54 PM (IST)

தமிழக அரசியலில் மீண்டும் ஒரு புதிய திருப்பம்: விஜய்க்கு இடதுசாரி கட்சிகள் ஆதரவு
வெள்ளி 8, மே 2026 3:59:57 PM (IST)

காங்கிரஸ் கட்சியினரை விரட்டியடித்த திமுகவினர் - தமிழக அரசியல் களத்தில் பரபரப்பு!
வெள்ளி 8, மே 2026 3:48:25 PM (IST)

தவெகவை ஆட்சி அமைக்க அழைக்காத ஆளுநரைக் கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்!
வெள்ளி 8, மே 2026 3:13:26 PM (IST)


