» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

மர்ம கும்பல் கொலைவெறி தாக்குதலில் 2பேர் பலி: தெக்ஷண மாற நாடார் சங்கம் கண்டனம்!

செவ்வாய் 3, மார்ச் 2026 3:13:52 PM (IST)

நாங்குநேரி அருகே பெரும்பத்து கிராமத்தில் டீக்கடை முன்பு நின்றிருந்தவர்கள் மீது நடத்தப்பட்ட கொடூரத் தாக்குதலுக்கு திருநெல்வேலி தெக்ஷண மாற நாடார் சங்கம் தனது பலத்த கண்டனத்தைப் பதிவு செய்துள்ளது.

நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே உள்ள பெரும்பத்து கிராமத்தில் நேற்று இரவில் அங்குள்ள டீக்கடை முன்பு நெல்சன் (55), ராமசாமி (80), பிரபாகரன் (50), மீரான்குளம் கணேசன் (50), இந்திராகாலனி ஜான் மற்றும் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளி ஒருவரும் பேசிக்கொண்டிருந்தனர்.

அப்போது 3 மோட்டார் சைக்கிள்களில் வந்த 9 பேர் கொண்ட மர்ம கும்பல், மதுபோதையில் அங்கிருந்த 6 பேரையும் அரிவாளால் சரமாரியாக வெட்டியதுடன், பெட்ரோல் குண்டுகளையும் வீசிச் சென்றனர். தொடர்ந்து கடம்போடு வாழ்வு கிராமத்திற்குள் புகுந்த அக்கும்பல், அங்கிருந்த 3 பேரையும் வெட்டிவிட்டு ஒரு பைக்கையும் திருடிச் சென்றது.

இந்தத் தாக்குதலில் இந்திராகாலனி ஜான் மற்றும் செங்கல் சூளை தொழிலாளி ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 7 பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்தச் செயலுக்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ள திருநெல்வேலி தெக்ஷண மாற நாடார் சங்கம், தமிழக அரசு மற்றும் காவல்துறையிடம் பின்வரும் கோரிக்கைகளை முன்வைத்துள்ளது:

இறந்தவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்திற்கு அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். தாக்குதல் நடத்தியவர்களை உடனடியாகக் கைது செய்து அவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் போதைப் பொருட்களின் நடமாட்டத்தை அடியோடு ஒழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory