» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
சொந்தக் கட்சிக்கே கால்ஷீட் கொடுக்கும் ஒரே தலைவர் விஜய் : மதுக்கூர் ராமலிங்கம் விமர்சனம்!
செவ்வாய் 17, பிப்ரவரி 2026 7:53:31 AM (IST)
சினிமா படங்களுக்கு கால்ஷீட் கொடுப்பது போல, தான் தொடங்கியுள்ள சொந்தக் கட்சிக்கே 'கால்ஷீட்' கொடுத்துச் செயல்படும் ஒரே தலைவர் விஜய் ஒருவர்தான்" என மதுக்கூர் ராமலிங்கம் கடுமையாக விமர்சித்துள்ளார்.
கோவில்பட்டி அருகே உள்ள இனாம் மணியாச்சியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் விளக்க மற்றும் நிதியளிப்பு பொதுக்கூட்டத்தில் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் மதுக்கூர் ராமலிங்கம் சிறப்புரையாற்றினார். அவர் பேசியதாவது: மகளிர் உரிமைத் தொகையாக ரூ.5,000 வழங்கப்பட்டவுடன் அதிமுக, பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் அதிர்ச்சியில் உள்ளனர். நடிகர் விஜய் தொடங்கியிருக்கும் கட்சியின் கொள்கைகள் என்னவென்றே இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. விஜய்யின் அரசியல் நிலைப்பாடுகள் குறித்து யார் வேண்டுமானாலும் விமர்சிக்கலாம்; ஆனால், அவரது தனிப்பட்ட வாழ்க்கை குறித்துப் பேசுவது தவறானது. அதேபோல், நடிகை குறித்து நயினார் நாகேந்திரன் பேசிய கருத்தை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம். சினிமாவிற்குப் போவது போல, அரசியலுக்கும் 'கால்ஷீட்' கொடுத்துச் செயல்படும் ஒரே தலைவர் விஜய் தான்."
தனித்து நின்று ஆட்சி அமைப்போம் என எடப்பாடி பழனிசாமி கூறுகிறார். மறுபுறம் முதன்முறையாக ஆட்சிக்கு வருவோம் என பாஜகவினர் பேசி வருகின்றனர். ஒருவேளை எடப்பாடி பழனிசாமி வெற்றி பெற்றாலும், அது அதிமுக ஆட்சியாக இருக்காது; மறைமுகமாக அது பாஜக ஆட்சியாகவே இருக்கும் என்றார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி அருகே விஏஓ வீட்டில் ரூ.12லட்சம் நகை கொள்ளை: போலீசார் விசாரணை
செவ்வாய் 17, பிப்ரவரி 2026 3:31:41 PM (IST)

மாபெரும் காதுகுத்து விழா: வினோத அழைப்பிதழுடன் பேரவைக்கு வந்த அதிமுக எம்.எல்.ஏ-க்கள்!
செவ்வாய் 17, பிப்ரவரி 2026 12:06:48 PM (IST)

பள்ளிக்கல்வித்துறைக்கு ரூ.48,534 கோடி நிதி ஒதுக்கீடு: இடைக்கால பட்ஜெட்டில் அறிவிப்பு
செவ்வாய் 17, பிப்ரவரி 2026 11:03:17 AM (IST)

வங்கியில் தீ விபத்து : முக்கிய ஆவணங்கள் எரிந்து சாம்பல்! பணம், நகைகளுக்கு சேதம் இல்லை!
செவ்வாய் 17, பிப்ரவரி 2026 8:16:58 AM (IST)

நெல்லையில் மாணவிகளுக்குப் பாலியல் தொல்லை: கணித ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது
செவ்வாய் 17, பிப்ரவரி 2026 8:11:14 AM (IST)

எந்தவொரு வாக்காளரும் விடுபடாத வகையில் தீவிர கண்காணிப்பு: திமுக செயற்குழுவில் தீர்மானம்
செவ்வாய் 17, பிப்ரவரி 2026 7:59:41 AM (IST)

