» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
சுகாதாரத் துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.8 லட்சம் மோசடி: 2 பெண்கள் கைது!
சனி 14, பிப்ரவரி 2026 8:19:00 AM (IST)
நெல்லையில் சுகாதாரத் துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி வாலிபர் ஒருவரிடம் ரூ.8 லட்சம் மோசடி செய்த இரண்டு பெண்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
நெல்லையைச் சேர்ந்த அஜித் குமார் (27) என்பவரிடம், சிவகங்கையைச் சேர்ந்த ராஜலட்சுமி (43) மற்றும் புதுக்கோட்டையைச் சேர்ந்த சரோஜினி (28) ஆகிய இருவரும் தங்களை அதிகாரிகளாகக் காட்டிப் பழகியுள்ளனர். நெல்லை சுகாதாரத் துறையில் ஆய்வாளர் வேலை வாங்கித் தருவதாக ஆசை வார்த்தை கூறி, அவரிடமிருந்து ரூ.8 லட்சம் பணத்தைப் பெற்றுக் கொண்டு போலி பணி நியமன ஆணையையும் வழங்கியுள்ளனர்.
இது குறித்து அஜித் குமார் அளித்த புகாரின் பேரில், நெல்லை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் படி தனிப்படை அமைக்கப்பட்டது. விசாரணையில் மோசடி உறுதியானதைத் தொடர்ந்து, சரோஜினி மற்றும் ராஜலட்சுமி ஆகிய இருவரையும் போலீசார் நேற்று கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ரயில்வே பெண் ஊழியரைப் பாலியல் வன்புணர்வு செய்ய முயன்ற வாலிபருக்கு 5 ஆண்டுகள் சிறை!
சனி 14, பிப்ரவரி 2026 8:25:03 AM (IST)

சிவன் கோவில்களில் நாளை மகா சிவராத்திரி விழா: வண்ண விளக்குகளால் ஜொலிக்கும் நெல்லையப்பர் கோவில்!
சனி 14, பிப்ரவரி 2026 8:09:54 AM (IST)

விஜய் பங்கேற்ற த.வெ.க. மாநாட்டில் துயரம் : கூட்டத்தில் மயங்கி விழுந்த நபர் உயிரிழப்பு!
வெள்ளி 13, பிப்ரவரி 2026 8:46:26 PM (IST)

திமுகவை பொறுத்தவரை தேர்தல் வெற்றிக்கு மட்டுமே கூட்டணி : விஜய் விமர்சனம்!
வெள்ளி 13, பிப்ரவரி 2026 5:18:51 PM (IST)

பிரச்சினையை எதிர்கொள்ளும் துணிச்சல் இல்லாதவர் விஜய் : எடப்பாடி பழனிசாமி சாடல்!
வெள்ளி 13, பிப்ரவரி 2026 5:02:27 PM (IST)

தூத்துக்குடி மாவட்ட எஸ்பி சிலம்பரசன் மாற்றம் : புதிய எஸ்பியாக மதன் நியமனம்!
வெள்ளி 13, பிப்ரவரி 2026 3:24:31 PM (IST)

