» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
சிவன் கோவில்களில் நாளை மகா சிவராத்திரி விழா: வண்ண விளக்குகளால் ஜொலிக்கும் நெல்லையப்பர் கோவில்!
சனி 14, பிப்ரவரி 2026 8:09:54 AM (IST)

நாளை மகா சிவராத்திரி விழாவை முன்னிட்டு, நெல்லை மற்றும் அதன் சுற்றுவட்டார மாவட்டங்களில் உள்ள சிவன் கோவில்களில் சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
நெல்லையப்பர் - காந்திமதி அம்பாள் கோவிலில் நாளை இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை நான்கு கால பூஜைகள் நடைபெறவுள்ளன. விழாக்கோலத்தை முன்னிட்டு கோவில் முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. சுவாமி சன்னதி மற்றும் அம்பாள் சன்னதி வளாகங்களில் பரதநாட்டியம், தேவாரம், வீணை இசை மற்றும் பக்தி இசை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.
திருச்செந்தூர்: சுப்பிரமணிய சுவாமி கோவிலின் உபகோவிலான ஆனந்தவல்லி அம்பாள் சமேத சிவக்கொழுந்தீஸ்வரர் கோவிலில் மூன்று கால பூஜைகள் நடைபெறுகின்றன. பாளையங்கோட்டை திரிபுராந்தீஸ்வரர் கோவிலில் 4 கால பூஜைகளுடன் பக்தர்களுக்குப் பிரசாதம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தச்சநல்லூர் நெல்லையப்பர், சந்திப்பு கைலாசநாதர், டவுன் தொண்டர்கள் நயினார் கோவில் உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெறவுள்ளன. இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் அறங்காவலர்கள் இதற்கான விரிவான ஏற்பாடுகளைச் செய்துள்ளனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ரயில்வே பெண் ஊழியரைப் பாலியல் வன்புணர்வு செய்ய முயன்ற வாலிபருக்கு 5 ஆண்டுகள் சிறை!
சனி 14, பிப்ரவரி 2026 8:25:03 AM (IST)

சுகாதாரத் துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.8 லட்சம் மோசடி: 2 பெண்கள் கைது!
சனி 14, பிப்ரவரி 2026 8:19:00 AM (IST)

விஜய் பங்கேற்ற த.வெ.க. மாநாட்டில் துயரம் : கூட்டத்தில் மயங்கி விழுந்த நபர் உயிரிழப்பு!
வெள்ளி 13, பிப்ரவரி 2026 8:46:26 PM (IST)

திமுகவை பொறுத்தவரை தேர்தல் வெற்றிக்கு மட்டுமே கூட்டணி : விஜய் விமர்சனம்!
வெள்ளி 13, பிப்ரவரி 2026 5:18:51 PM (IST)

பிரச்சினையை எதிர்கொள்ளும் துணிச்சல் இல்லாதவர் விஜய் : எடப்பாடி பழனிசாமி சாடல்!
வெள்ளி 13, பிப்ரவரி 2026 5:02:27 PM (IST)

தூத்துக்குடி மாவட்ட எஸ்பி சிலம்பரசன் மாற்றம் : புதிய எஸ்பியாக மதன் நியமனம்!
வெள்ளி 13, பிப்ரவரி 2026 3:24:31 PM (IST)

