» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

உடைந்த ஸ்டியரிங்குடன் இயக்கப்படும் அரசுப் பேருந்து? - தமிழக அரசு விளக்கம்

சனி 31, ஜனவரி 2026 4:59:26 PM (IST)


உடைந்த ஸ்டியரிங்குடன் அரசுப் பேருந்து இயக்கப்படுவதாக சமூக வலைதளங்களில் பரவும் புகைப்படம் குறித்து தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக்கழக பேருந்து உடைந்த ஸ்டியரிங்குடன் இயக்கப்படுவதாக சமூக வலைதளங்களில் புகைப்படம் ஒன்று பரவி வருகிறது. இந்த நிலையில் அந்த புகைப்படம் தமிழ்நாட்டில் எடுக்கப்பட்டது அல்ல. சீனாவில் எடுக்கப்பட்ட புகைப்படம் என்று தமிழக அரசின் தகவல் சரிபார்ப்பகம் தெரிவித்துள்ளது. 

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் "தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக்கழக பேருந்து உடைந்த ஸ்டியரிங்குடன் இயக்கப்படுவதாக புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் பரப்பப்படுகிறது. இது முற்றிலும் தவறான தகவல். சீன ஓட்டுநர் உடைந்த ஸ்டியரிங்குடன் பேருந்து இயக்கியதாகக் கடந்த 2009ம் ஆண்டு முதல் இப்புகைப்படம் பகிரப்பட்டு வருகிறது. இதனைத் தமிழ்நாடு அரசு பேருந்து எனத் தவறாகப் பரப்புகின்றனர். வதந்தியைப் பரப்பாதீர். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory