» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பிப்.1ல் தைப்பூசம் : பூஜை நேரங்கள் மாற்றம்!
வியாழன் 29, ஜனவரி 2026 7:49:18 AM (IST)

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் பிப்.1ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை தைப்பூசம் நடைபெறுவதையொட்டி பூஜை நேரங்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து திருக்கோயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் உற்சவரான சண்முகர் கடலில் கண்டெடுக்கப்பட்டு 371 ஆண்டுகள் ஆகின்றன. அதை கொண்டாடும் வகையில் சண்முகர் ஆண்டு விழா சனிக்கிழமை (ஜன. 31) நடைபெறுகிறது. இதைத் தொடர்ந்து கோயில் அதிகாலை 5 மணிக்கு நடைதிறக்கப்பட்டு, 5.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், காலை 6 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம்,10 மணிக்கு சண்முகர் அபிஷேகம், 4 மணிக்கு சாயரட்சை தீபாராதனையும், மாலை 5 மணிக்கு மேல் சுவாமி அலைவாயுகந்த பெருமான் வீதியுலா வந்து கோயில் சேர்ந்து தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடைபெறும்.
ஞாயிற்றுக்கிழமை (பிப்.1) தைப்பூச திருவிழாவையொட்டி, அதிகாலை 4 மணிக்கு திருக்கோயில் நடை திறக்கப்பட்டு, 4.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 6 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், காலை 8.30 மணிக்கு தீர்த்தவாரி ஆகியவை நடைபெறும். 10 மணிக்கு சண்முகர் அபிஷேகம், பிற்பகல் 1 மணிக்கு சுவாமி அலைவாயுகந்த பெருமான் தைப்பூச மண்டபத்துக்கு புறப்படுதல், மாலை 5 மணிக்கு சுவாமி தனித் தங்க மயில் வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தவாறு திருக்கோயில் சேர்கிறார். தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடைபெறுகின்றன எனக் கூறப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

முழுக்க முழுக்க சுயநலம், துரோகம்: பா.ஜ.க. கூட்டணிக்கு எந்தக் கொள்கையும் கிடையாது: முதல்வர் பேச்சு
வெள்ளி 30, ஜனவரி 2026 5:48:41 PM (IST)

புனித வெள்ளியன்று மதுக்கடைகளை மூட தீர்மானம் : சட்டமன்றத்தில் நிறைவேற்ற கோரிக்கை!
வெள்ளி 30, ஜனவரி 2026 5:06:09 PM (IST)

திமுக தேர்தல் அறிக்கையின் மீது மக்களுக்கு மிகுந்த நம்பிக்கை உள்ளது: கனிமொழி எம்.பி பேட்டி!
வெள்ளி 30, ஜனவரி 2026 3:55:06 PM (IST)

தூத்துக்குடியில் தரமற்ற சாலையால் மாணவன் பலி? அதிமுக உறுப்பினர் புகார் - திமுக எதிர்ப்பு!
வெள்ளி 30, ஜனவரி 2026 3:27:15 PM (IST)

தொடர்ந்து 5 நாட்களாக பதிவுத் துறை சர்வர் முடக்கம் : ரியல் எஸ்டேட் கூட்டமைப்பு கண்டனம்
வெள்ளி 30, ஜனவரி 2026 3:10:41 PM (IST)

தமிழக மக்களுக்கும், தமிழ்நாட்டை நம்பி வந்தவர்களுக்கும் பாதுகாப்பில்லை: விஜய் குற்றச்சாட்டு
வெள்ளி 30, ஜனவரி 2026 12:13:08 PM (IST)

