» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

இலங்கை கடல் பகுதியில் ரூ.2 ஆயிரம் கோடி போதை பொருட்கள் பறிமுதல்: 11 பேர் கைது

செவ்வாய் 27, ஜனவரி 2026 8:20:05 AM (IST)



இலங்கை கடல் பகுதியில் ரூ.2 ஆயிரம் காேடி மதிப்புள்ள பாேதைப் பொருட்களை அந்நாட்டு கடற்படை கைப்பற்றியது. இதுதொடர்பாக 11 பேர் கைது செய்யப்பட்டனர்.

தமிழக கடல் பகுதிகளில் இருந்து இலங்கைக்கு அவ்வப்போது பீடி இலை, பீடி பண்டல், கஞ்சா, உயர்ரக போதைப்பொருட்கள், மஞ்சள், ஏலக்காய், மருந்து பொருட்கள் உள்ளிட்டவை அவ்வப்ேபாது படகுகள் மூலம் கடத்திச் செல்லப்படுகின்றன.

இந்நிலையில், இலங்கை கொழும்பு பகுதியை ஒட்டிய சர்வதேச கடல் பகுதியில் சந்தேகப்படும்படியாக வந்த இலங்கையை சேர்ந்த மீன்பிடி படகு ஒன்றை நிறுத்தி இலங்கை கடற்படையினர் சோதனை செய்தனர். அந்த படகில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள ஹெராயின் மற்றும் ஐஸ் போதை பொருள் இருந்தது தெரியவந்தது. தொடர்ந்து அந்த படகையும், அதில் இருந்தவர்களையும் கொழும்பு கடற்படை முகாமுக்கு கொண்டு ெசன்றனர்.

அந்த படகில் 184 கிலோ ஹெராயின் மற்றும் 112 கிலோ ஐஸ் போதை பொருள் இருந்தன. இதுதொடர்பாக இலங்கையை சேர்ந்த 11 பேரை கைது செய்து அந்நாட்டு போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த போதைப் பொருட்கள் எந்த பகுதியில் இருந்து கடத்தப்பட்டன என்பது குறித்தும் இலங்கை கடற்படையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட இந்த போதை பொருட்களின் மதிப்பு ரூ.2 ஆயிரம் கோடிக்குமேல் இருக்கும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory