» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
ஜன நாயகன் திரைப்படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவு
வெள்ளி 9, ஜனவரி 2026 10:55:38 AM (IST)

தவெக தலைவர் விஜய் நடித்துள்ள ஜனநாயகன் திரைப்படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்க சென்சார் வாரியத்திற்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தவெக தலைவர் விஜய் நடிப்பில் எச்.வினோத் இயக்கியுள்ள திரைப்படம் 'ஜனநாயகன். இப்படம் இன்று (ஜன.,9) ரிலீஸ் ஆவதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகள் இருப்பதாக கூறி இதுவரை தணிக்கை சான்றிதழ் வழங்கப்படாததால் பட வெளியீட்டில் சிக்கல் ஏற்பட்டது.
இதனால் பட தயாரிப்பு நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. அந்த வழக்கு தொடர்பான விசாரனை கடந்த (ஜன.6) நடைபெற்றது. வழக்கை விசாரித்த நீதிபதி பி.டி.ஆஷா தணிக்கைச் சான்றிதழ் விவகாரம் தொடர்பான ஜன.9ஆம் தேதி தீர்ப்பு வழங்க முயற்சிப்பதாக நீதிபதி கூறியிருந்தார்.
இதன்படி இன்று நடந்த விசாரணையில், ஜனநாயகன் திரைப்படத்தை மறு ஆய்வுக்கு அனுப்பிய உத்தரவை ரத்து செய்து நீதிபதி பி.டி.ஆஷா உத்தரவிட்டுள்ளார். மேலும், ஜனநாயகன் திரைப்படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்க சென்சார் வாரியத்திற்கு உத்தரவிட்டார். ஜனநாயகனுக்கு எதிரான புகார் ஆபத்தானது; இதுபோன்ற புகார்களை ஊக்கப்படுத்த முடியாது எனவும் உயர்நீதிமன்றம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், தனி நீதிபதி தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் தணிக்கை வாரியம் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.இந்த மேல்முறையீட்டை மனுவாக தாக்கல் செய்ய தலைமை நீதிபதி அனுமதி அளித்த நிலையில், திங்கள்கிழமை அன்றே விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என்று தணிக்கை வாரியம் கோரிக்கை வைத்தது.
ஆனால், எப்போது விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று தலைமை நீதிபதியே முடிவெடுப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், ஜன நாயகன் திரைப்படம் வெளியாவதில் மீண்டும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் 1.5 கோடி கஞ்சா ஆயில் பறிமுதல்: 3 நாட்களில் 4பேர் கைது!
வெள்ளி 9, ஜனவரி 2026 8:09:55 PM (IST)

ஜனநாயகன் படத்துக்கு தணிக்கை சான்றிதழ்: வழக்கு விசாரணை ஜன.21க்கு தள்ளி வைப்பு
வெள்ளி 9, ஜனவரி 2026 5:21:19 PM (IST)

ஆதார்,ரேஷன் கார்டுகளை ஒப்படைத்து தேர்தலை புறக்கணிக்க முடிவு: விவசாயிகள் அறிவிப்பு!
வெள்ளி 9, ஜனவரி 2026 5:08:32 PM (IST)

ஜன.10, 11ல் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த முகாம் - ஆட்சியர் தகவல்!
வெள்ளி 9, ஜனவரி 2026 4:39:06 PM (IST)

தவெக தேர்தல் அறிக்கை தயாரிக்க 12 பேர் கொண்ட குழு அமைப்பு: விஜய் அறிவிப்பு
வெள்ளி 9, ஜனவரி 2026 4:19:26 PM (IST)

தமிழ்நாட்டுக்கான ஒரு மாபெரும் கனவுத் திட்டத்தை அறிவிக்கப் போகிறேன்: முதல்வர் ஸ்டாலின் தகவல்
வெள்ளி 9, ஜனவரி 2026 4:08:09 PM (IST)