» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

ரசிகர்களுக்கு புத்தாண்டு வாழ்த்து கூறிய நடிகர் ரஜினிகாந்த்!

வியாழன் 1, ஜனவரி 2026 12:00:06 PM (IST)



சென்னையில் தனது வீட்டின் முன் குவிந்திருந்த ரசிகர்களை நேரில் சந்தித்த நடிகர் ரஜினிகாந்த் கை அசைத்தும் புத்தாண்டு வாழ்த்து கூறினார்.

நடிகர் ரஜினிகாந்துக்கு புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவிக்கும்பொருட்டு சென்னை போயஸ் கார்டனில் உள்ள அவரது இல்லத்தின் முன்பு ரசிகர்கள் திரண்டனர். நடிகர் ரஜினியும் வெளியே வர, கூடியிருந்த ரசிகர்கள் புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்தனர். ரஜினியும் உடனே ரசிகர்களைப் பார்த்து கையசைத்து வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

நீண்ட நேரம் காத்திருந்த ரசிகர்கள் ரஜினியைப் பார்த்தபிறகு மகிழ்ச்சியுடன் திரும்பிச் சென்றனர்.புத்தாண்டையொட்டி அரசியல் தலைவர்கள், திரை பிரபலங்கள் பலரும் மக்களுக்கு வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர். மேலும் தான் நடித்த 'முத்து' படத்தில் உள்ள வசனத்தைப் பகிர்ந்து ரஜினி புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory