» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

ஜனவரியில் பள்ளிகளுக்கு 11 நாட்கள் விடுமுறை : மாணவ, மாணவிகள் மகிழ்ச்சி!!

புதன் 31, டிசம்பர் 2025 12:54:28 PM (IST)



ஜனவரி மாதத்தில் மட்டும் 11 நாட்கள் விடுமுறை வருவதால் மாணவ- மாணவிகள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

2025-26-கல்வி ஆண்டில் பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு, அரையாண்டு தேர்வுகள் முடிவடைந்துள்ளது. மாணவர்கள் தற்போது அரையாண்டு விடுமுறையில் உள்ளனர். கடந்த 24-ம்தேதி தொடங்கிய அரையாண்டு விடுமுறை வருகிற ஜனவரி 4-ம் தேதியுடன் முடிவடைகிறது. 12 நாட்கள் விடுமுறைக்கு பிறகு 5-ம் தேதி பள்ளிகள் வழக்கம் போல் தொடங்கும்.

2026-ம் ஆண்டு தொடங்க உள்ள நிலையில் புத்தாண்டில் ஜனவரி மாதத்தில் மட்டும் பள்ளி மாணவர்களுக்கு 11 நாட்கள் விடுமுறை வருகிறது. ஏற்கனவே ஜனவரி தொடக்கத்தில் 4 நாட்கள் விடுமுறையை மாணவர்கள் கழித்த நிலையில் 15-ம்தேதி முதல் பொங்கல் பண்டிகை விடுமுறை தொடங்குகிறது. 15-ம்தேதி பொங்கல், 16-ம்தேதி திருவள்ளுவர் தினம்,

17-ம் தேதி சனிக்கிழமை உழவர் தினம், ஞாயிறு விடுமுறை தினம் என தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை கிடைக்கிறது. பின்னர் குடியரசு தினத்தையொட்டி தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை வருகிறது. ஜனவரி மாதத்தில் மட்டும் 11 நாட்கள் விடுமுறை வருவதால் மாணவ- மாணவிகள் உற்சாகம் அடைந்துள்ளனர். இந்த விடுமுறை அனைத்து அரசு அலுவலர்கள், வங்கி ஊழியர்களுக்கும் பொருந்தும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory