» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
கார்த்தி நடித்துள்ள வா வாத்தியார் திரைப்படத்திற்கு தடை : சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!
வியாழன் 4, டிசம்பர் 2025 4:10:42 PM (IST)

கார்த்தி நடித்துள்ள 'வா வாத்தியார்' படத்தை வெளியிட இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மெய்யழகன்' படத்தைத் தொடர்ந்து, நலன் குமாரசாமி இயக்கத்தில் 'வா வாத்தியார்' என்ற படத்தில் கார்த்தி நடித்து முடித்துள்ளார். கீர்த்தி ஷெட்டி கதாநாயகியாக நடித்துள்ளார். சத்யராஜ், ராஜ்கிரண் உள்பட பலரும் நடித்துள்ளனர். இந்த படத்தின் டீசரும், பாடல்களும் ஏற்கனவே வெளியாகி கவனம் ஈர்த்தன. இப்படம் வரும் 12ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்தது.
இந்நிலையில், ஸ்டூடியோ க்ரீன் தயாரிப்பில் கார்த்தி நடிக்கும் 'வா வாத்தியார்' திரைப்படத்தை வெளியிட சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. தன்னிடம் வாங்கிய கடனை வட்டியுடன் சேர்த்து ரூ.21.78 கோடி பணத்தை வழங்க தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவுக்கு உத்தரவிட வேண்டும் என அர்ஜூன்லால் சுந்தர்தாஸ் என்பவர் தொடர்ந்த வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணை வரும் 8ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தொடர் மழையால் டெங்கு பாதிப்பு அதிகரிப்பு: பொது சுகாதாரத்துறை தகவல்!
வியாழன் 4, டிசம்பர் 2025 5:26:47 PM (IST)

நெல்லை மாவட்டத்தில் எஸ்ஐஆர் பணிகள் : தேர்தல் ஆணையத்தின் இயக்குநர் ஆய்வு!
வியாழன் 4, டிசம்பர் 2025 5:02:54 PM (IST)

திருப்பரங்குன்றம் வழக்கில் தமிழக அரசின் மேல்முறையீடு மனு தள்ளுபடி: இரு நீதிபதிகள் அமர்வு உத்தரவு
வியாழன் 4, டிசம்பர் 2025 4:48:07 PM (IST)

புதுச்சேரியில் டிச.9-ல் விஜய் பொதுக் கூட்டம்: காவல்துறை அனுமதி கோரி தவெக மனு
வியாழன் 4, டிசம்பர் 2025 4:30:25 PM (IST)

கலவரத்தை தூண்டும் நோக்கத்தில் தி.மு.க. அரசு செயல்படுகிறது: நயினார் நாகேந்திரன் பேட்டி
வியாழன் 4, டிசம்பர் 2025 3:44:35 PM (IST)

நெல்லை, தூத்துக்குடி, தென்காசியில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆர்வலர் தகவல்!
வியாழன் 4, டிசம்பர் 2025 3:31:53 PM (IST)


.gif)