» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
நடுக்கடலில் மீனவர்கள் மீது பெட்ரோல் குண்டு வீச்சு: ஒருவர் காயம் - தூத்துக்குடியில் பரபரப்பு
வெள்ளி 28, நவம்பர் 2025 10:31:29 AM (IST)
தூத்துக்குடி அருகே நடுக்கடலில் மீனவர்கள் மீது பெட்ரோல் குண்டு வீசியதில் ஒருவர் காயம் அடைந்தார். இந்த சம்பவம் மீனவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வங்கக்கடலில் புயல் சின்னம் உருவாகி இருப்பதால் கடலில் சுறாவளிக் காற்று வீசி வருகிறது இதனால் தூத்துக்குடி மாவட்டத்தில் மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்க செல்லக்கூடாது என்று மீன்வளத்துறை மூலம் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இதனால் கடந்த ஐந்து நாட்களாக மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை
இந்த நிலையில் தருவைகுளம் கடற்கரையில் இருந்து ஒரு விசைப் படகில் கடந்த 10நாட்களுக்கு முன்னர் மீனவர்கள் தங்கு கடலுக்குள் மீன் பிடிக்க சென்றனர். இவர்கள் புயல் எச்சரிக்கை காரணமாக கரை திரும்பிக் கொண்டிருந்தனர். கூத்தக்குழி கடற்கரையில் இருந்து நான்கு கடல் மைல் தொலைவில் வந்து கொண்டிருந்தபோது ஒரு பைபர் படகில் வந்த 4பேர் கொண்ட கும்பல் விசைப்படகு மீனவர்கள் மீது திடீரென ஆயுதங்களால் தாக்கினார்களாம்.
இதை எதிர்பாராத மீனவர்கள் சுதாரிப்பதற்குள் பைபர் படகில்வந்த கும்பல் பெட்ரோல் குண்டுகளை சரமாரியாக விசைப்படகு மீது வீசினார்களாம். இதில் விசைப்படையில் இருந்த ஒரு மீனவர் காயம் அடைந்தார். உடனடியாக காயமடைந்த மீனவரை சக மீனவர்கள் மீட்டு திருச்செந்தூர் கடற்கரைக்கு கொண்டு வந்து, அரசு மருத்துவமனையில் சேர்த்தனர் அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பின் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் குறித்து கூடங்குளம் கடலோர காவல் படையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் தூத்துக்குடி - திருச்செந்தூர் பகுதி மீனவர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தொடர் மழையால் டெங்கு பாதிப்பு அதிகரிப்பு: பொது சுகாதாரத்துறை தகவல்!
வியாழன் 4, டிசம்பர் 2025 5:26:47 PM (IST)

நெல்லை மாவட்டத்தில் எஸ்ஐஆர் பணிகள் : தேர்தல் ஆணையத்தின் இயக்குநர் ஆய்வு!
வியாழன் 4, டிசம்பர் 2025 5:02:54 PM (IST)

திருப்பரங்குன்றம் வழக்கில் தமிழக அரசின் மேல்முறையீடு மனு தள்ளுபடி: இரு நீதிபதிகள் அமர்வு உத்தரவு
வியாழன் 4, டிசம்பர் 2025 4:48:07 PM (IST)

புதுச்சேரியில் டிச.9-ல் விஜய் பொதுக் கூட்டம்: காவல்துறை அனுமதி கோரி தவெக மனு
வியாழன் 4, டிசம்பர் 2025 4:30:25 PM (IST)

கார்த்தி நடித்துள்ள வா வாத்தியார் திரைப்படத்திற்கு தடை : சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!
வியாழன் 4, டிசம்பர் 2025 4:10:42 PM (IST)

கலவரத்தை தூண்டும் நோக்கத்தில் தி.மு.க. அரசு செயல்படுகிறது: நயினார் நாகேந்திரன் பேட்டி
வியாழன் 4, டிசம்பர் 2025 3:44:35 PM (IST)


.gif)
ANTONY LAWRENCENov 28, 2025 - 04:13:01 PM | Posted IP 104.2*****