» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தந்தையாக மட்டுமல்ல தலைவனாக மகிழ்ச்சி: உதயநிதிக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து!
வியாழன் 27, நவம்பர் 2025 12:27:22 PM (IST)

துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 49-வது பிறந்தநாளை முன்னிட்டு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், கொள்கைப் பற்றோடு உழைப்பிலும் உயர்ந்து வரும் உதயநிதிக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள்! இளைஞரணிச் செயலாளராக - விளையாட்டுத் துறை அமைச்சராக - மாண்புமிகு துணை முதலமைச்சராக நீ ஆற்றிவரும் பணிகளை மக்களும் கழகத்தினரும் பாராட்டிச் சொல்வதைக் கேட்கும்போது தந்தையாக மட்டுமல்ல தலைவனாக மகிழ்ச்சி அடைகிறேன்!
திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமைத் தொண்டனாக நான் உனக்கு அறிவுறுத்துவது, காட்சிக்கு எளியனாக, கடுஞ்சொல் சொல்லாதவனாக, மக்களின் அன்புக்குரியவனாக, எப்போதும் அவர்களுக்காகக் களத்தில் நிற்பவனாக நீ திகழ வேண்டும். இளைஞர்களிடம் திராவிட இயக்கக் கருத்தியலைத் தொடர்ந்து விதைத்து, அவர்களுக்கு எடுத்துக்காட்டாகத் திகழ வேண்டும்! இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஓட்டல் உரிமையாளர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு: நெல்லை அருகே பரபரப்பு!!
புதன் 3, டிசம்பர் 2025 8:24:25 AM (IST)

தமிழக அரசின் பதிவுத்துறையில் ஒரே நாளில் ரூ.302 கோடி வருவாய்: வரலாற்று சாதனை!
செவ்வாய் 2, டிசம்பர் 2025 8:08:31 PM (IST)

3வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை : வாலிபருக்கு 20 ஆண்டுகள் சிறை!
செவ்வாய் 2, டிசம்பர் 2025 8:04:20 PM (IST)

தூத்துக்குடி மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை : வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!
செவ்வாய் 2, டிசம்பர் 2025 7:55:28 PM (IST)

பாமக தலைவராக அன்புமணிக்கு அங்கீகாரம்: தேர்தல் ஆணையத்திற்கு எதிராக ராமதாஸ் வழக்கு!
செவ்வாய் 2, டிசம்பர் 2025 4:53:41 PM (IST)

புதுவையில் தவெக தலைவர் விஜய் ரோடு ஷோ நடத்த காவல்துறை அனுமதி மறுப்பு
செவ்வாய் 2, டிசம்பர் 2025 4:47:53 PM (IST)


.gif)
திருட்டு குடும்பம்Nov 27, 2025 - 12:41:26 PM | Posted IP 172.7*****