» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

எஸ்ஐஆர் பணிகளால் சுமார் ஒரு கோடி பேர் வாக்குரிமை இழப்பர் - சீமான் குற்றச்சாட்டு!

திங்கள் 17, நவம்பர் 2025 5:41:09 PM (IST)

தமிழகத்தில் எஸ்ஐஆர் திட்டத்தால் சுமார்  ஒரு கோடி பேர் தங்களது வாக்குரிமையை இழப்பார்கள் என்று சீமான் கூறினார்.

வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை உடனடியாக நிறுத்த வலியுறுத்தி சென்னை, எழும்பூரில் இராஜரத்தினம் விளையாட்டுத் திடல் அருகில் நாம் தமிழர் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், மத்திய அரசுக்கு எதிராகவும், தேர்தல் ஆணையத்திற்கு எதிராகவும் கோஷம் எழுப்பப்பட்டது. பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய சீமான் கூறியதாவது: வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை அவசர அவசரமாக கொண்டு வருவது ஏன்? திடீரென போலி வாக்காளர்களை கண்டு பிடித்தது போல பேசுவது ஏன்?

ஈரோடு இடைத்தேர்தலில் கள்ள ஓட்டு போட்டது தேர்தல் ஆணையத்திற்கு தெரியாதா? ஒரே மாதத்தில் 6 கோடி வாக்காளர்களை எப்படி சரிபார்க்க முடியும். ஓராண்டு கால அவகாசம் எடுத்து எஸ்ஐஆர் பணிகளை செய்திருக்க வேண்டும். ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்கள் தங்களுக்கான வாக்காளர்களை தேர்ந்தெடுக்கின்றனர். எங்களை போன்ற வளர்ந்து வரும் கட்சியினர் எஸ்ஐஆர்-ஐ எப்படி எதிர்கொள்ள முடியும்? குறைந்தது ஒரு கோடி பேர் தங்களது வாக்குரிமையை இழப்பார்கள். இவ்வாறு அவர் கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory