» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தூத்துக்குடி, நெல்லை, குமரியில் கனமழை எப்போது துவங்கும்? வெதர்மேன் தகவல்!

திங்கள் 17, நவம்பர் 2025 3:44:28 PM (IST)

தூத்துக்குடி, நெல்லை, குமரி மாவட்டங்களில் கட்டாயம் மிக கனமழை பெய்யும் என்று தென்காசி வெதர்மேன் ராஜா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: ”தென்மேற்கு வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி குமரி கடலை நோக்கி நகர வாய்ப்புள்ளது. இதன் காரணமாக டெல்டா மற்றும் தென் மாவட்டங்களில் பருவமழை தீவிரமடைய வாய்ப்பு இருப்பதாகக் கணிப்பு வெளியிட்டிருந்தோம்.

ஆனால், திங்கள்கிழமை மதியம் வரை தமிழகக் கடலோர மாவட்டங்களில் மழை தீவிரமடையவில்லை. தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள இலங்கைக் கடல் பகுதியில் நீடிக்கும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி மிக மிக மெதுவாகவே நகருகிறது. இதனால் மழை தொடங்குவதிலும் தாமதம் ஏற்படுகிறது.

மழை பெய்வதில் தாமதம் ஏற்பட்டாலும் கட்டாயம் மழை பெய்யும் என்ற நம்பிக்கையை மக்களுக்கு அளிக்கிறேன். சற்று பொறுத்திருக்கவும், வரும் 24 மணி நேரத்திற்குள்ளாக டெல்டா மற்றும் தென் மாவட்டங்களில் நல்ல மழை பெய்யும். குறிப்பாக ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய தென் கடலோர மாவட்டங்களில் கட்டாயம் மிக கனமழை பெய்யும். அதில் எந்த வித மாற்றமும் இல்லை” என்று கூறியுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory