» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தாயை வெட்டிக்கொன்ற மகனுக்கு ஆயுள் தண்டனை: நெல்லை நீதிமன்றம் தீர்ப்பு

வியாழன் 18, செப்டம்பர் 2025 8:29:56 AM (IST)

கூடங்குளம் அருகே தாயை வெட்டிக்கொன்ற மகனுக்கு ஆயுள் தண்டனை விதித்து நெல்லை மகிளா நீதிமன்றம்  தீர்ப்பு கூறியது.

நெல்லை மாவட்டம் கூடங்குளம் அருகே உள்ள செட்டிகுளத்தை சேர்ந்தவர் ராஜாமணி. இவரது மனைவி ஜெயமணி (60). இவர்களது மகன் ராஜன் (46).இவர் கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக மும்பையில் டெயிலராக பணியாற்றிவிட்டு சொந்த ஊருக்கு திரும்பினார். பின்னர் உள்ளூரில் கூலித்தொழிலாளியாக வேலை செய்தார்.

ஜெயமணியிடம், ராஜன் தனது பெயரில் வீட்டை எழுதி தர வேண்டும் என்று கூறி அடிக்கடி தகராறு செய்து வந்தார். கடந்த 7.5.2020 அன்று 2 பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த ராஜன் வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து தனது தாய் என்றும் பார்க்காமல் ஜெயமணியை சரமாரியாக வெட்டிக்கொலை செய்தார். இதுகுறித்து கூடங்குளம் போலீசார் வழக்குப்பதிந்து, ராஜனை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை நெல்லை மகிளா கோர்ட்டில் நடந்தது.

நேற்று இந்த வழக்கு நீதிபதி ராமலிங்கம் முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது ராஜன் மீது குற்றங்கள் நிரூபிக்கப்பட்டதையடுத்து இந்திய தண்டனை சட்டப்பிரிவு 302 (கொலை குற்றம்) ஆயுள் தண்டனை மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதம், சட்டப்பிரிவு 449 (கொலை செய்யும் நோக்கில் வீட்டுக்குள் அத்துமீறி நுழைதல்) 10 ஆண்டுகள் மற்றும் ரூ.5 ஆயிரம் அபராதம், 324 (அபாயகரமான ஆயுதத்தை பயன்படுத்தி காயம் ஏற்படுத்துதல்) 3 ஆண்டுகள் மற்றும் ரூ.1,000 அபராதம், 352 (ஒரு நபரை தாக்குதல்) 3 மாதம் சிறை மற்றும் ரூ.500 அபராதம் விதித்தார்.

இந்த கொலையின் தன்மையை கருத்தில் கொண்டு, ராஜன் முதலில் 449, 324, 352 ஆகிய சட்டப்பிரிவுகளுக்கு வழங்கப்பட்ட 13 ஆண்டுகள் மற்றும் 3 மாதம் சிறை தண்டனையை அனுபவித்த பின்னர் கொலை குற்றத்துக்கான ஆயுள் தண்டனையை அனுபவிக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்தார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் ஜெயபிரபா ஆஜரானார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory