» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தூத்துக்குடி விமான நிலையத்தில் சேவை தினம்: பயணிகளுக்கு இனிப்பு வழங்கி வரவேற்பு

புதன் 17, செப்டம்பர் 2025 3:21:40 PM (IST)



தூத்துக்குடி விமான நிலையத்தில் பயணிகள் சேவை தினத்தையொட்டி பயணிகளுக்கு இனிப்புகள் வழங்கி வரவேற்பு அளிக்கப்பட்டது.

இந்திய விமானநிலைய ஆணையம் நாட்டில் உள்ள அனைத்து விமான நிலையங்களிலும் ‘யாத்ரி சேவா திவஸ் 2025' என்னும் பயணிகள் சேவை தினம் கடைபிடிக்க உத்தரவிட்டு இருந்தது. இதனையொட்டி தூத்துக்குடி விமான நிலையத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. தூத்துக்குடி விமான நிலையத்துக்கு முதல் விமானம் சென்னையில் இருந்து காலை 7.25 மணிக்கு வந்தது. 

இந்த விமானத்தில் வந்த பயணிகளுக்கு இனிப்புகள், குங்குமம், சந்தனம் வழங்கி வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து மறவன்மடம் செர்வைட் பள்ளி மாணவர்களின் நாட்டுப்புற கலைநிகழ்ச்சி நடந்தது. மேலும், மருத்துவ முகாம், கண் பரிசோதனை முகாம், ரத்ததான முகாம் நடத்தப்பட்டது. விமான நிலைய ஊழியர்கள், அலுவலர்கள், பயணிகள் கலந்து கொண்டனர். ரத்ததான முகாமில் விமான நிலைய ஊழியர்கள் சுமார் 40 பேர் ரத்ததானம் வழங்கினர்.

தமிழன்டா கலைக்குழு சார்பில் தப்பாட்டம், பறையாட்டம், பொய்க்கால் குதிரையாட்டம் போன்ற நாட்டுப்புற கலைநிகழ்ச்சிகள் நடந்தன. மேலும், பள்ளி மாணவர்களுக்கு ஓவியம், கட்டுரை உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டன. விமான நிலையத்தை சுற்றியுள்ள பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர். அதே போன்று விமான போக்குவரத்து துறையில் உள்ள வேலைவாய்ப்புகள் குறித்து மாணவர்களுக்கான தொழில் வழிகாட்டும் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது. 

பயணிகள் சேவை தினத்தை முன்னிட்டு விமான நிலையத்தை மாணவர்கள் பார்வையிட அனுமதிக்கப்பட்டனர். பிரதமர் மோடி படத்துடன் செல்பி எடுத்துக் கொள்ள செல்பி பாயிண்ட் அமைக்கப்பட்டு இருந்தது. அதில் பயணிகள் ஆர்வமுடன் செல்பி எடுத்து மகிழ்ந்தனர். இந்த நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகளை விமான நிலைய இயக்குநர் (பொறுப்பு) காட்வின் தலைமையில் அதிகாரிகள், ஊழியர்கள் செய்து இருந்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory