» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தமிழகத்தில் 11 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்: தமிழ்நாடு அரசு உத்தரவு

வியாழன் 31, ஜூலை 2025 4:31:14 PM (IST)

தமிழகத்தில் 11 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்து தலைமைச் செயலர் நா. முருகானந்தம் உத்தரவு பிறப்பித்துள்ளார். 

அவரது உத்தரவில் தெரிவித்திருப்பதாவது:
  • போக்குவரத்துத் துறை முதன்மைச் செயலாளர் சுன்சோங்கத்திற்கு இயற்கை வளங்கள் துறை கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது
  • நிதித் துறை செலவின செயலாளராக பிரசாந்த் மு வடநெரே பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
  • நிதித் துறை இணைச் செயலாளராக ராஜ கோபால் சுன்கரா பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
  • தீபக் ஜேக்கப் நில அளவுத்துறை இயக்குநராகவும், கஜலட்சுமி போக்குவரத்து மற்றும் சாலைப்பாதுகாப்பு ஆணையராகவும், கவிதா ராமு கூட்டுறவு சங்க மேலாண்மை இயக்குராகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
  • குடிநீர் வடிவால் வாரிய மேலாண்மை இயக்குநராக சமீரனும், மீன்வளத்துறை இயக்குநராக முரளீதரனும், வருவாய் நிர்வாக ஆணையராக கிரண் குராலாவும, கோவை வணிக வரி இணை ஆணையராக தாக்கரே சுபம் ஞானதேவ்ராவ்வும், சென்னை வணிக வரி (அதிக வரி செலுத்துவோர் பிரிவு) இணை ஆணையராக நாரயண சர்மா ஆகியோர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory