» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

ஒரு ரூபாய் ரீசார்ஜ் செய்தால் 1 மாதம் முழுவதும் இலவசம் : பி.எஸ்.என்.எல். சுதந்திர தின அதிரடி ஆஃபர்

திங்கள் 4, ஆகஸ்ட் 2025 12:52:35 PM (IST)

பி.எஸ்.என்.எல். நெட்வொர்க் சுதந்திர தின அதிரடி ஆஃபராக 1 ரூபாய் ரீசார்ஜ் செய்தால் 1 மாதம் இலவச சலுகைகளை வழங்குகிறது.

இந்தியாவின் 78-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு "சுதந்திர தினத் திட்டம்” என்ற பெயரில், பி.எஸ்.என்.எல். மாதம் முழுவதும் வெறும் 1 ரூபாயில் வரம்பற்ற சேவைகளை வழங்க தீர்மானித்துள்ளது. இந்த சேவையானது ஆகஸ்ட் 1 முதல் 30 வரை மட்டுமே கிடைக்கும். இது இந்திய சுதந்திர தின கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக பி.எஸ்.என்.எல். அறிமுகப்படுத்திய சலுகையாகும்.

பி.எஸ்.என்.எல். வாடிக்கையாளர்கள் 1 ரூபாய் ரீசார்ஜ் செய்தால் 30 நாள்களுக்கு தினமும் 4ஜி வேகத்துடன் 2 ஜி.பி. டேட்டா, 100 எஸ்.எம்.எஸ். மற்றும் அன்லிமிடெட் அழைப்புகளை இலவசமாக பெறலாம். அத்துடன் புதிதாக ஒரு சிம் கார்டும் இலவசமாக வழங்கப்படுகிறது. இந்த ஆஃபர் ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை மட்டுமே உள்ளது.

இந்த சலுகையை பெற விரும்பும் பொதுமக்கள், அருகிலுள்ள பி.எஸ்.என்.எல். வாடிக்கையாளர் சேவை மையம் அல்லது முகாம் நடைபெறும் இடங்களுக்கு நேரில் சென்று பதிவு செய்து பெற்றுக்கொள்ளலாம். இலவச சிம்கார்டு பெற பொதுமக்கள் ஆதார் அட்டை நகல் கொண்டு செல்ல வேண்டும் என தூத்துக்குடி மாவட்ட பி.எஸ்.என்.எல். தொலை தொடர்புத்துறை அறிவித்துள்ளது‌.


மக்கள் கருத்து

முதலில்Aug 4, 2025 - 06:14:25 PM | Posted IP 104.2*****

டவர் கிடைக்கணும்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory