» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
ஐடி ஊழியர் கவின் கொலை வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்: தமிழக அரசு உத்தரவு
புதன் 30, ஜூலை 2025 4:26:59 PM (IST)
ஆறுமுகமங்கலத்தைச் சேர்ந்த ஐடி ஊழியர் கவின் ஆணவக்கொலை வழக்கின் விசாரணையை சிபிசிஐடி-க்கு மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டது.
தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகமங்கலத்தைச் சேர்ந்தவர் சந்திரசேகர். இவருடைய மகன் கவின் (27). சென்னையில் தகவல் தொழில்நுட்ப என்ஜினீயராக பணியாற்றி வந்த கவின் விடுமுறைக்காக ஊருக்கு சென்றிருந்தார். கடந்த 27-ந் தேதி தனது தாத்தாவை சிகிச்சைக்காக பாளையங்கோட்டை கே.டி.சி. நகர் பகுதியில் உள்ள ஒரு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றார்.
அப்போது, அவரை நெல்லை பாளையங்கோட்டை கே.டி.சி. நகர் பகுதியைச் சேர்ந்த சுர்ஜித் (24) என்ற வாலிபர் சரமாரியாக வெட்டிக் கொலை செய்தார். கைது செய்யப்பட்ட அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் சுர்ஜித்தின் அக்காளுடன் வேறு சமூகத்தைச் சேர்ந்த கவின் பழகியதால் அவர் ஆணவ கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது.
சுர்ஜித் கைது செய்யப்பட்ட நிலையில், அவரது பெற்றோரான சரவணன் மற்றும் கிருஷ்ணகுமாரி ஆகியோர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. அவர்கள் இருவரும் சப்-இன்ஸ்பெக்டர்களாகப் பணியாற்றி வந்த நிலையில், இடைநீக்கம் செய்யப்பட்டனர்.
அவர்கள் இருவரையும் கைது செய்தால் மட்டுமே கவினின் உடலை வாங்கி அடக்கம் செய்வோம் என உயிரிழந்த இளைஞரின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று அரசு அறிவித்த நிவாரண நிதியை கவினின் பெற்றோர் வாங்க மறுத்தனர். இந்நிலையில், இந்த வழக்கின் விசாரணையை சிபிசிஐடி-க்கு மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக தமிழக டிஜிபி வெளியிட்டுள்ள அறிக்கையில், விசாரணை பாரபட்சமின்றி நடைபெறுவதை உறுதிசெய்யும் வகையில் வழக்கு சிபிசிஐடி-க்கு மாற்றப்பட்டுள்ளது. வழக்கு விசாரணை வெளிப்படையாக நடைபெறுவதற்காக குற்றம் சாட்டப்பட்டவரின் பெற்றோர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என தெரிவித்துள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பாஜகவுடனான உறவு முறிவு: முதல்வருடன் ஓபிஎஸ் சந்திப்பு - பண்ருட்டி ராமச்சந்திரன் விளக்கம்
வியாழன் 31, ஜூலை 2025 5:32:08 PM (IST)

தூத்துக்குடியில் ஆக.2ஆம் தேதி மாபெரும் மருத்துவ முகாம்: அமைச்சர் பி.கீதாஜீவன் தகவல்!!
வியாழன் 31, ஜூலை 2025 5:08:39 PM (IST)

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: 2பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைப்பு!
வியாழன் 31, ஜூலை 2025 5:03:41 PM (IST)

நெல்லையில் ரூ.2.53 கோடி நலத்திட்ட உதவிகள்: நலவாரிய தலைவர் வெ.ஆறுச்சாமி வழங்கினார்
வியாழன் 31, ஜூலை 2025 4:57:47 PM (IST)

அதிமுக - பா.ஜ.க. கூட்டணிக்கு விஜய் வருவதுதான் சரியான முடிவாக இருக்கும்: குஷ்பு கருத்து!
வியாழன் 31, ஜூலை 2025 4:50:56 PM (IST)

விளாத்திகுளத்தில் ரூ.1.83 கோடியில் சார்பதிவாளர் அலுவலக புதிய கட்டிடம்: முதல்வர் திறந்து வைத்தார்
வியாழன் 31, ஜூலை 2025 4:36:05 PM (IST)
