» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

ரேஷன் கடையில் பழைய ரூ.100 நோட்டை வாங்க மறுப்பு : பெண் ஊழியர் மீது புகார்

ஞாயிறு 20, ஜூலை 2025 10:32:49 AM (IST)

பாளையங்கோட்டை ரேஷன் கடையில் பழைய ரூ.100 நோட்டை வாங்க மறுத்ததாக பெண் ஊழியர் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. 

பாளையங்கோட்டை ராஜேந்திரன் நகர் பகுதியை சேர்ந்தவர் ரத்தினகுமார். ஆட்டோ டிரைவரான இவர் சம்பத்தன்று தனது மனைவியுடன் அப்பகுதியில் உள்ள கூட்டுறவு பேரங்காடி ரேஷன் கடைக்கு பொருட்கள் வாங்க சென்றார். அப்போது அவர் வாங்கிய பொருட்களுக்கு பணமாக 100 ரூபாய் பழைய நோட்டு ஒன்றை கொடுத்துள்ளார். 

பணத்தை வாங்கிய கடையின் பெண் ஊழியர் அந்த நோட்டை பார்த்துவிட்டு, ‘‘இந்த பணம் செல்லாது, வேறு நோட்டு கொடுங்கள்’’ கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த ரத்தினகுமார், ‘‘புழக்கத்தில் உள்ள நோட்டு தானே இது. அரசு இதுவரை இந்த பணத்தை செல்லாது என அறிவிக்காத நிலையில், ஏன் இதை வாங்கமறுக்கிறீர்கள்?’’ என்று கேட்டுள்ளார்.

அதற்கு கடை விற்பனையாளர், ரத்தினகுமார் மற்றும் அவரது மனைவியை அவதூறான பேசியதாக கூறி ரத்தினகுமார் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து புகார் அளித்துள்ளார். அதில், ‘‘சம்பந்தப்பட்ட ரேஷன்கடை ஊழியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என தெரிவித்துள்ளார். 

மேலும், ‘‘ரேஷன் கடையில் சம்பந்தமில்லாத மேலும் பணியாளர்கள் போல சிலர் செயல்பட்டு வருவதாகவும், அவர்கள் மூலம் பல்வேறு முறைகேடுகள் நடக்க வாய்ப்பு உள்ளதாகவும், அதுகுறித்தும் விசாரிக்க வேண்டும், இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்கவில்லையென்றால், நாம் தமிழர் கட்சியுடன் இணைந்து போராட்டத்தில் ஈடுபட போவதாக’’ கூறியுள்ளார். அவர்களிடம் வருவாய்த்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி அனுப்பி வைத்தனர்.

இதனிடையே ரத்தினகுமார், ரேஷன் கடை பெண் ஊழியரிடம் பேசிய வீடியோ வைரலாகி வருகிறது. இதுகுறித்து கூட்டுறவுத்துறை அதிகாரிகள் கூறுகையில், ரேஷன் கடையில் பழைய ரூ100 நோட்டை வாங்காதது குறித்த புகார் எங்களுக்கு வந்துள்ளது. இது குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. அதன் முடிவில் ரேஷன் கடை பணியாளர் தவறு செய்திருந்தது தெரிய வந்தால் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்’’ என்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Thoothukudi Business Directory