» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
திமுக ஆட்சி கட்டுப்பாட்டில் இல்லாமல் தறிகெட்டு ஓடுகிறது: கடம்பூர் ராஜூ குற்றச்சாட்டு
வியாழன் 3, ஜூலை 2025 7:46:42 PM (IST)
திமுக ஆட்சி அவர்கட்டுப்பாட்டில் இல்லாமல் தறிகெட்டு ஓடுகிறது என்று முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ எம்எல்ஏ குற்றம்சாட்டினார்.
மகாகவி பாரதியார் பிறந்த இல்லத்தை புதுப்பிக்காத தமிழக அரசை கண்டித்து எட்டயபுரத்தில் அதிமுக சார்பில் வடக்கு மாவட்ட அதிமுக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கடம்பூர் செ.ராஜூ எம்எல்ஏ தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் அவர் பேசியதாவது: அதிமுக ஆட்சியில் ஒரே ஒரு சம்பவம் சாத்தான்குளத்தில் நடந்தது. அது தவறுதான். அந்த வழக்கு சிபிஐ-க்கு மாற்றப்பட்டு, அதில் குற்றச்சாட்டப்பட்டவர்கள் இன்று வரை வெளிவர முடியாத நிலை உள்ளது.
ஆனால், இந்த ஆட்சியில் இதுவரை 25 சம்பவங்கள் நடந்துள்ளன. ஸ்டெர்லைட் போராட்டத்துக்கு இன்றைக்கு அமைச்சராக உள்ள கீதாஜீவன்தான் காரணம். அந்தப் போராட்டத்தை தூண்டிவிட்டது யார்? போராட்டத்தை தொடங்கி வைத்த தலைவர்கள் எங்கே போனார்கள்? அவர்கள் பாதிக்கப்பட்டார்களா? அப்பாவிகள் 13 பேர் உயிரிழந்தனர். பத்திரிகையாளர்கள், ஊடகங்கள் சுதந்திரமாக செயல்பட முடியவில்லை.
திமுக அரசின் தவறுகளை சுட்டிக்காட்டக் கூடாது என்ற நிலைப்பாட்டில் இந்த அரசு உள்ளது. அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தை மூடி மறைக்கப் பார்த்தார்கள். நீதிமன்றம் தலையிட்ட பின்னர் ஞானசேகரன் கைது செய்யப்பட்டார். அதில், யார் அந்த சார்? என்ற விவகாரத்துக்கு ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும் பதில் கிடைக்கும். இந்த ஆட்சியே இவர்களின் கட்டுப்பாட்டில் இல்லை. தறிகெட்டு ஓடுகிறது. இவ்வாறு அவர் தெரி்வித்தார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நெல்லையப்பர் திருக்கோயில் தேரோட்டம் பணிகள் : ஆட்சியர் இரா.சுகுமார் ஆய்வு!
வெள்ளி 4, ஜூலை 2025 12:12:23 PM (IST)

விசிக பெண் கவுன்சிலர் வெட்டிக் கொலை: கணவர் வெறிச்செயல்!!
வெள்ளி 4, ஜூலை 2025 11:36:36 AM (IST)

அஜித்குமாரின் உடலில் 50 இடங்களில் காயங்கள் : பிரேத பரிசோதனை அறிக்கையில் தகவல்
வெள்ளி 4, ஜூலை 2025 11:19:18 AM (IST)

வகுப்பறையில் 21 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: அரசு பள்ளி ஆசிரியர் கைது
வெள்ளி 4, ஜூலை 2025 10:58:15 AM (IST)

வீட்டில் தனியாக இருந்த இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை : போலீஸ்காரர் கைது!
வெள்ளி 4, ஜூலை 2025 10:53:27 AM (IST)

நெல்லையில் நகை மதிப்பீட்டாளர் பயிற்சி: ஜூலை 10ஆம் தேதி தொடங்குகிறது
வெள்ளி 4, ஜூலை 2025 8:14:52 AM (IST)
