» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

திருச்செந்தூர் கோயில் குடமுழுக்கு விழா சிறப்பு பேருந்துகள் இயக்கம் - ஆட்சியர் தகவல்!!

வியாழன் 3, ஜூலை 2025 4:28:31 PM (IST)

திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் குடமுழுக்கு நன்னீராட்டு விழாவை முன்னிட்டு சிறப்பு சேவை பேருந்துகள் இயக்கப்படுகிறது என்று மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் தெரிவித்துள்ளார். 

07.07.2025 அன்று திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோவில் குடமுழுக்கு நன்னீராட்டு விழா நடைபெறுவதை முன்னிட்டு பக்தர்களின் நலன் கருதி தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம், திருநெல்வேலி கோட்டம் சார்பாக 05.07.2025 முதல் 08.07.2025 வரை சிறப்பு பேருந்துகள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, சென்னை, திருச்சி, கோயம்புத்தூர், திருப்பூர், சேலம், மதுரை, இராமேஸ்வரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, நாகர்கோவில் ஆகிய பகுதிகளிலிருந்து திருச்செந்தூருக்கு தற்போது இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சுமார் 600 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளது.

மேலும், குடமுழுக்கு நன்னீராட்டு விழாவினை முன்னிட்டு மூன்று தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. திருநெல்வேலி சாலையிலுள்ள வேட்டைவெளிமடம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக பேருந்து நிலையத்திலிருந்து திருநெல்வேலி, பாபநாசம், தென்காசி, சுரண்டை, சங்கரன்கோவில், இராஜபாளையம் ஆகிய பகுதிகளுக்கும், தூத்துக்குடி சாலையிலுள்ள பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் மணிமண்டபம் எதிர்புறம் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக பேருந்து நிலையத்திலிருந்து தூத்துக்குடி, கோவில்பட்டி, இராமேஸ்வரம், அருப்புக்கோட்டை, விளாத்திகுளம், மதுரை, கோயம்புத்தூர், திருப்பூர் / ஈரோடு, திருச்சி, சென்னை, சேலம் ஆகிய பகுதிகளுக்கும் மற்றும் கன்னியாகுமரி – நாகர்கோவில் சாலையிலுள்ள தெப்பகுளம் அருகில் உள்ள தற்காலிக பேருந்து நிலையத்திலிருந்து சாத்தான்குளம், திசையன்விளை, வள்ளியூர், நாகர்கோவில், கன்னியாகுமரி ஆகிய பகுதிகளுக்கு சிறப்பு சேவை பேருந்துகள் இயக்கப்படவுள்ளது.

மேலும், பக்தர்களின் வசதிக்காக மேற்காணும் மூன்று தற்காலிக பேருந்து நிலையங்களிலிருந்து தலா 10 சிறப்பு பேருந்துகள் வீதம் மொத்தம் 30 சிறப்பு பேருந்துகள் திருச்செந்தூர் திருக்கோவில் வாசலுக்கு இயக்கப்படவுள்ளது. எனவே, திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் நடைபெறும் குடமுழுக்கு நன்னீராட்டு விழாவினை முன்னிட்டு இயக்கப்படும் சிறப்பு பேருந்துகளை பயன்படுத்தி பக்தர்கள் பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Thoothukudi Business Directory