» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

நெல்லை-மேட்டுப்பாளையம் சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு : தெற்கு ரயில்வே அறிவிப்பு

வியாழன் 3, ஜூலை 2025 8:52:46 AM (IST)

நெல்லையில் இருந்து தென்காசி, மதுரை வழியாக மேட்டுப்பாளையம் வரை இயக்கப்படும் வாராந்திர சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயிலின் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது. 

மதுரை கோட்ட ரயில்வேக்கு உள்பட்ட மணப்பாறை மற்றும் கொளத்தூர் ரயில் நிலையங்களுக்கு இடையே உள்ள தண்டவாளங்களில் நடந்து வரும் பராமரிப்பு பணி காரணமாக அந்த பாதையில் செல்லும் ஒரு சில ரயில்களின் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, மதுரையில் இருந்து தெலுங்கானா மாநிலம் கச்சிகுடாவுக்கு புதன்கிழமை தோறும் இயக்கப்படும் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில் வருகிற 9,16,30-ஆம் தேதிகளில் மதுரையில் இருந்து காலை 10.40 மணிக்கு பதிலாக மதியம் 12 மணிக்கு புறப்படும்.

அதேபோல, நெல்லையில் இருந்து தென்காசி, மதுரை வழியாக மேட்டுப்பாளையம் வரை இயக்கப்படும் வாராந்திர சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயிலின் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இந்த ரயில்கள் (வ.எண்.06029/06030) வருகிற 6-ஆம் தேதி முதல் செப்டம்பர் மாதம் 1-ஆம் தேதி வரை நீட்டிப்பு செய்து இயக்கப்படுகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Thoothukudi Business Directory