» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
மும்மொழி கொள்கை விவகாரம்: மத்திய அமைச்சருக்கு முதல்வர் ஸ்டாலின் கடும் கண்டனம்!
ஞாயிறு 16, பிப்ரவரி 2025 5:48:24 PM (IST)
மும்மொழி கொள்கை அமல்படுத்தும் விவகாரத்தில் பிளாக்மெயில் செய்வதை தமிழர்கள் பொறுத்துக் கொள்ள மாட்டார்கள் என மத்திய அமைச்சருக்கு முதல்வர் ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் அதனை உறுதிப்படுத்தி உள்ளார். வாரணாசியில் நேற்று நடைபெற்ற காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி தொடக்க விழாவில் பங்கேற்ற பிறகு நிருபர்களுக்கு அவர் பேட்டி அளித்தார். அப்போது காசி தமிழ் சங்கமம் தொடர்பான விளக்கங்களை கூறிய அவரிடம், தமிழ்நாட்டுக்கு சமக்ர சிக்சா அபியான் திட்டத்தில் நிதி மறுக்கப்படுவது குறித்தும் கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு பதில் அளித்து தர்மேந்திர பிரதான் கூறியதாவது: தேசியக்கல்வி கொள்கையின்படி இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களும் தங்களது தாய்மொழி மற்றும் ஆங்கிலம், இதனைத் தொடர்ந்து 3-வது மொழியாக இந்தியையும் ஏற்றுக்கொண்டுள்ளன. ஆனால் தமிழ்நாடு மட்டும் இதனை ஏன் ஏற்க மறுக்கிறது?. விதிகளின்படி 3-வது மொழியை ஏற்க வேண்டும். ஏற்க முடியாது என்று சொல்வது தவறு. அதனை ஏற்கும் வரை விதிகளின்படி, தமிழ்நாட்டுக்கு நிதி வழங்க முடியாது.
தமிழ்நாடு ஏன் இதனை ஏற்க மறுக்கிறது என்றால், இதனை வைத்து அவர்கள் அரசியல் செய்கிறார்கள். விதிகளை அவர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும். ஏற்றுக்கொண்டால் நிதி வழங்கப்படும். தமிழை நாங்கள் படிக்கக்கூடாது என்று சொல்லவில்லை. 3-வதாக ஒரு மொழியையும் கற்றுக்கொள்ளுங்கள் என்றுதான் சொல்கிறோம்.இவ்வாறு அவர் கூறினார். மத்திய மந்திரியின் இந்த பேச்சுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் கண்ட னம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் சமூக வலைதள பதிவில் கூறி இருப்பதாவது: தமிழ்நாடு இந்திய அரசி யலமைப்பு சட்டத்தின் விதி முறைகளுக்குள் வர வேண் டும் என்கிறார் ஒன்றிய கல்வி மந்திரி. மும்மொழிக் கொள்கையை சட்டத்தின் விதி என்கிறார்.இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் எந்தப் பிரிவு மும்மொழிக் கொள்கையைக் கட்டாயமாக்குகிறது? எனக் கல்வி அமைச்சரால் கூற முடியுமா? மாநிலங்களால் ஆனதே இந்திய ஒன்றியம்! ஒத்தி சைவுப் பட்டியலில் உள்ளது தான் கல்வி! அதற்கு ஒன்றிய அரசு ஏகபோக எஜமானர்கள் அல்ல!
"மும்மொழிக் கொள்கை யை ஏற்கும் வரை தமிழ் நாட்டுக்கு நிதி கிடையாது” என்று ‘பிளாக்மெயில்’ செய்யும் தடித்தனத்தைத் தமிழர்கள் பொறுத்துக் கொள்ள மாட்டார்கள்! எங்கள் உரிமையைத்தான் கேட்கிறோம்! உங்கள் தனிச் சொத்தைக் கேட்பதுபோல் திமிராகப் பேசினால், தமி ழர்களின் தனிக்குணத்தை யும் டெல்லி பார்க்க வேண்டியிருக்கும்...இவ்வாறு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

திருச்செந்தூர் கோவில் பாதுகாப்பில் 360 டிகிரி கேமரா ஜிபிஎஸ் வாகனங்கள்: ஏடிஜிபி துவக்கி வைத்தார்
சனி 5, ஜூலை 2025 8:00:37 PM (IST)

வேலைவாய்ப்பு முகாமில் 5300 பேருக்கு பணிநியமன ஆணைகள் : சபாநாயகர், அமைச்சர்கள் வழங்கினர்!
சனி 5, ஜூலை 2025 5:44:29 PM (IST)

தமிழக வெற்றிக் கழகத்தின் ஆலோசகர் பொறுப்பிலிருந்து பிரசாந்த் கிஷோர் விலகல்!
சனி 5, ஜூலை 2025 5:15:49 PM (IST)

விவசாய நிலம் வாங்குவதற்கு ரூ. 5 இலட்சம் வரை கடன் உதவி : ஆட்சியர் க.இளம்பகவத் தகவல்
சனி 5, ஜூலை 2025 4:39:34 PM (IST)

எடப்பாடி பழனிசாமிக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு: மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு
சனி 5, ஜூலை 2025 11:43:12 AM (IST)

தூத்துக்குடி விமான நிலையம் ரூ.380 கோடியில் விரிவாக்கம் : விரைவில் திறப்பு விழா!
சனி 5, ஜூலை 2025 8:58:51 AM (IST)
