» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தூத்துக்குடி பைக் ஷோரூமில் ரூ.40 லட்சம் மோசடி செய்தவருக்கு 3ஆண்டு சிறை!
வெள்ளி 11, அக்டோபர் 2024 11:49:53 AM (IST)
தூத்துக்குடியில் பைக் ஷோரூமில் ரூ.40 லட்சம் பணத்தை மோசடி செய்தவருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.
தூத்துக்குடி சிதம்பரநகரை சேர்ந்த ஆசீர்வாதம் மகன் ராஜ்குமார் (69) என்பவர் தூத்துக்குடி பாளையங்கோட்டை ரோட்டில் இருசக்கர வாகன ஷோரூம் வைத்துள்ளார். இந்த ஷோரூமில் RTO அலுவலக வாகன பதிவு சம்பந்தமாக பணிபுரிந்து வந்த தூத்துக்குடி எழில் நகரைச் சேர்ந்த இசக்கிமுத்து மகன் குருராஜ் (37) என்பவர் ஒவ்வொரு நாளும் நிறுவன கணக்காளரிடமிருந்து பணம் பெற்று அதை ஷோரூம் நிறுவன வங்கி கணக்கில் செலுத்தி பின்னர் RTO அலுவலகத்திற்கு செலுத்த வேண்டிய தொகையை ஆன்லைன் மூலம் செலுத்தி வரும் வேலை பார்த்து வருகிறார்.
இந்நிலையில் குருராஜ் என்பவர் மேற்படி ஷோரூம் நிறுவனத்தில் பெற்ற பணத்தை வங்கி கணக்கில் செலுத்தாமல் மொத்தம் ரூ.40லட்சம் பணம் மோசடி செய்ததாக மேற்படி இருசக்கர வாகன ஷோரூம் உரிமையாளர் ராஜ்குமார் அளித்த புகாரின் பேரில் தூத்துக்குடி மாவட்ட குற்றப்பிரிவு - I போலீசார் வழக்குபதிவு செய்து மேற்படி எதிரி குருராஜை கைது செய்தனர்.
இவ்வழக்கின் விசாரணை தூத்துக்குடி மாவட்ட குற்றவியல் நீதிமன்றம் - IV நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இவ்வழக்கை விசாரித்த நீதிபதி குபேரசுந்தர் நேற்று வழக்கின் குற்றவாளியான குருராஜுக்கு 3 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.10ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார்.
இவ்வழக்கை சிறப்பாக புலனாய்வு செய்த மாவட்ட குற்றப்பிரிவு I காவல் ஆய்வாளர் லட்சுமி பிரபா, குற்றவாளிக்கு தண்டனை பெற்று தர நீதிமன்றத்தில் திறம்பட வாதிட்ட அரசு தரப்பு வழக்கறிஞர் கண்ணன், விசாரணைக்கு உதவியாக இருந்த தலைமை காவலர் வைரமணி ஆகியோரையும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் பாராட்டினார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக வலுவடைந்தது : சென்னையில் கனமழைக்கு வாய்ப்பு!
வெள்ளி 24, அக்டோபர் 2025 12:54:33 PM (IST)

கனிம வளத்துறை உதவி இயக்குனர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை!
வெள்ளி 24, அக்டோபர் 2025 12:06:49 PM (IST)

தமிழ்நாட்டில் பள்ளிகளில் மாணவர் இடைநிற்றல் விகிதம் அதிகரிப்பு : யு.டி.ஐ.எஸ்.இ. தகவல்
வெள்ளி 24, அக்டோபர் 2025 11:55:14 AM (IST)

தன் மகளை விட நன்றாக படித்த மாணவனை கொன்ற பெண்ணுக்கு ஆயுள் தண்டனை!
வெள்ளி 24, அக்டோபர் 2025 8:43:22 AM (IST)

தொடர் மழை: நெல்லை, தூத்துக்குடியில் 67 குளங்கள் நிரம்பின!
வெள்ளி 24, அக்டோபர் 2025 8:36:51 AM (IST)

தமிழகத்தில் வீடுகளுக்கான மின்சார கட்டணம் திடீர் உயர்வு? அதிகாரிகள் விளக்கம்
வெள்ளி 24, அக்டோபர் 2025 8:34:53 AM (IST)


.gif)
tuticorinOct 13, 2024 - 10:56:31 AM | Posted IP 162.1*****