» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
நெல்லை எக்ஸ்பிரசில் மழைநீர் ஒழுகியது; மின்சாரம் துண்டிப்பு- பயணிகள் அவதி
ஞாயிறு 14, ஜூலை 2024 2:42:53 PM (IST)
நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் மழைநீர் ஒழுகி மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் பயணிகள் பெரிதும் அவதி அடைந்தனர்.
சென்னை மற்றும் புறநகர்பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு கனமழை பெய்தது. இந்தநிலையில், சென்னை எழும்பூரில் இருந்து இரவு 8.20 மணிக்கு நெல்லை எக்ஸ்பிரஸ் ரயில் புறப்பட்டது. ரயில் மேல்மருவத்தூர் சென்று கொண்டிருந்தபோது ரயிலின் 3-ம் வகுப்பு ஏ.சி. பெட்டியில் மழை நீர் ஒழுகத் தொடங்கியது. பலத்த காற்றுடன் கனமழை பெய்ததால், அந்த பெட்டி முழுவதும் வேகமாக தண்ணீர் ஒழுகியது. இதனால், தரை முழுவதும் தண்ணீர் தேங்கியது. பெட்டியில் மழைநீர் ஒழுகியதால் மின் விளக்குகளில் தண்ணீர் பட்டு மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
இதனால், அந்த பெட்டி முழுவதும் இருளில் மூழ்கியது. மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் பயணிகள் பெரிதும் அவதி அடைந்தனர். மின்சார துண்டிப்பால் குளிர்சாதன இணைப்பும் தடைபட்டது. இதனால், என்ன செய்வதென தெரியாமல் பயணிகள் திகைத்து நின்றனர். மழைநீர் ஒழுகியது குறித்து அதிகாரிகளிடம் பயணிகள் புகார் தெரிவித்தனர். புகாரைத் தொடர்ந்து, ரயிலானது விழுப்புரம் ரயில் நிலையத்திற்கு சென்றதும் அங்கிருந்த ரயில்வே ஊழியர்கள் ரயில் பெட்டியில் தேங்கிகிடந்த தண்ணீரை வெளியேற்றினர்.
பின்னர், மின்தடை பிரச்சினை சரிசெய்யப்பட்டு, ரயில் தாமதமாக புறப்பட்டு நெல்லை நோக்கி சென்றது. எக்ஸ்பிரஸ் ரயில்களில் மழை நேரத்தில் இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகிறது. இதற்கு ரயில்வே நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை வைத்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அன்னை வேளாங்கண்ணி கெபி 44-வது ஆண்டு திருவிழா : தூத்துக்குடியில் கோலாகலத் தொடக்கம்!
சனி 29, ஆகஸ்ட் 2026 9:22:58 PM (IST)

மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைத்தீர்க்கும் நாள் : நலதிட்ட உதவிகளை ஆட்சியர் வழங்கினார்!
சனி 29, ஆகஸ்ட் 2026 5:43:26 PM (IST)

மூதாட்டியைக் கட்டிப்போட்டு 44 கிராம் நகை பறிப்பு : பக்கத்து வீட்டுப் பெண் உட்பட 2 பேர் கைது!
சனி 29, ஆகஸ்ட் 2026 5:14:03 PM (IST)

பெண்ணைக் கொன்று வேக வைத்த கொடூர தம்பதி கைது: விசாரணையில் பகீர் தகவல்கள்!
சனி 29, ஆகஸ்ட் 2026 4:39:35 PM (IST)

விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்துக: தமிழக அரசுக்கு தேமுதிக வலியுறுத்தல்!
சனி 29, ஆகஸ்ட் 2026 10:50:02 AM (IST)

அஞ்சல்துறையில் 2,095 பணியிடங்கள்: பத்தாம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!
சனி 29, ஆகஸ்ட் 2026 10:34:39 AM (IST)


