» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
திமுக அரசு மீது ரூ.4 லட்சம் கோடி ஊழல் புகார்: ஆளுநருடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு!
செவ்வாய் 6, ஜனவரி 2026 12:32:38 PM (IST)

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, 2021 முதல் திமுக ஆட்சியில் நடந்த ஊழல் தொடர்பான குற்றச்சாட்டு பட்டியலை ஆளுநரிடம் வழங்கியுள்ளார்.
தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியை, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று சந்தித்தார். இந்த சந்திப்பின் போது அதிமுக முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், எஸ்பி வேலுமணி உள்ளிட்டோரும் இருந்தனர். தமிழகத்தின் சட்டம்-ஒழுங்கு நிலவரம் மற்றும் திமுக அரசுக்கு எதிரான பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் அடங்கிய மனுவை, இந்த சந்திப்பின் போது எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.
பின்னர் எடப்பாடி பழனிசாமி அளித்த பேட்டியில், "திமுக ஆட்சியில் நகராட்சி நிர்வாக துறையில் ரூ.64 ஆயிரம் கோடி ஊழல் நடந்துள்ளது. சென்னை மாநகராட்சியில் ரூ.10 ஆயிரம் கோடி ஊழல் நடந்துள்ளது. தொழில் துறையில் ரூ.8 ஆயிரம் கோடி ஊழல் நடந்துள்ளது. பள்ளிக்கல்வி துறையில் ரூ.5ஆயிரம் கோடி ஊழல் நடந்துள்ளது. வேளாண் துறையில் ரூ.5 ஆயிரம் கோடி ஊழல் நடந்துள்ளது.
சமூக நலத்துறையில் ரூ.4ஆயிரம் கோடி ஊழல் நடந்துள்ளது. இந்து சமய அறநிலையத்துறையில் ரூ. ஆயிரம் கோடி ஊழல் நடந்துள்ளது. ஆதி திராவிட நலத்துறையில் ரூ.ஆயிரம் கோடி ஊழல் நடந்துள்ளது. இளைஞர் நலத்துறையில் ரூ.500 கோடி ஊழல் நடந்துள்ளது. சுற்றுலாத் துறையில் ரூ.250 கோடி ஊழல் என அனைத்து துறைகளிலும் முறைகேடுகள் நடந்திருப்பதை முழுமையாக சுட்டிக் காட்டியிருக்கிறோம்.
தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சரியாக இல்லாததால் தமிழகத்துக்கு வர வேண்டிய முதலீடுகள் எல்லாம் அண்டை மாநிலத்துக்கு சென்று விட்டன. கடந்த 4½ ஆண்டுகளில் தமிழக அரசு ரூ.4 லட்சம் கோடி அளவுக்கு ஊழல் செய்துள்ளது. இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆளுநரிடம் வலியுறுத்தி உள்ளோம் என்றார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அன்புமணியுடன் அதிமுக கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தியது ஏற்புடையது அல்ல! - ராமதாஸ்
புதன் 7, ஜனவரி 2026 5:14:15 PM (IST)

சட்டமன்ற பொதுத் தேர்தலை முன்னிட்டு மாதிரி வாக்குப்பதிவு: ஆட்சியர் இரா.சுகுமார் ஆய்வு
புதன் 7, ஜனவரி 2026 4:23:14 PM (IST)

தமிழ்நாட்டை நாம் ஆள வேண்டுமா? டெல்லி ஆள வேண்டுமா? முதல்வர் ஸ்டாலின் பேச்சு!
புதன் 7, ஜனவரி 2026 3:28:18 PM (IST)

திருச்செந்தூர் தைப்பூச விழாவிற்கு சிறப்பு ரயில் இயக்க பயணிகள் நலச்சங்கம் கோரிக்கை!
புதன் 7, ஜனவரி 2026 12:54:47 PM (IST)

தமிழகத்தில் கனமழை பெய்யக்கூடும் : வானிலை ஆய்வு மையம் தகவல்!
புதன் 7, ஜனவரி 2026 11:19:57 AM (IST)

ஆளுநரிடம் இருந்து பட்டம் பெற மறுத்த மாணவிக்கு எதிரான வழக்கு தள்ளுபடி
புதன் 7, ஜனவரி 2026 11:08:37 AM (IST)

