» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
காங்கேயத்தில் மாதிரி பள்ளி வானியல் வள பயிற்றுநர்களுக்கு டெலஸ்கோப் பயிற்சி
ஞாயிறு 23, ஜூன் 2024 5:45:20 PM (IST)

தமிழ்நாடு அஸ்ட்ரானமி சயின்ஸ் சொசைட்டி சார்பில் தமிழக அரசின் மாதிரிபள்ளி வானியல் வள பயிற்றுநர்களுக்கு டெலஸ்கோப் கையாளுதல் குறித்த பயிற்சி முகாம் காங்கேயம் பில்டர்ஸ் இன்ஜினியரிங் கல்லூரி வளாகத்தில் நடந்தது.
தமிழகம் முழுவதும் செயல்படும் அரசு மாதிரி பள்ளிகளில் தமிழ்நாடு அஸ்ட்ரானமி சயின்ஸ் சொசைட்டியின் வானியல் வள பயிற்றுநர்கள் மாணவர்களுக்கு பயிற்சி அளித்து வருகின்றனர். வானியல் வள பயிற்றுநர்களுக்கு டெலஸ்கோப் கையாளுதல், டெலஸ்கோப் மூலம் வானத்தில் நிகழும் அற்புதங்களை மாணவர்களுக்கு கற்பித்தல் குறித்து செயல்விளக்க பயிற்சி அளிக்கப்பட்டது
இந்நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு அஸ்ட்ரானமி சயின்ஸ் சொசைட்டி மாநில தலைவர் ஜி.ரமேஷ் தலைமை வகித்தார்.அறிவியல்பலகை இயக்குனர் ஸ்ரீகுமார், கோவை அஸ்ட்ரோ கிளப் ரமேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாதிரி பள்ளியின் டாஸ் ஒருங்கிணைப்பாளர் சக்திவேல் அனைவரையும் வரவேற்றார். காங்கேயம் இன்ஸ்டியூட் ஆப் காமர்ஸ் முதல்வர் சுரேஷ்குமார் பயிற்சி முகாமினை தொடக்கி வைத்து பேசினார்.
கோவை அஸ்ட்ரோ கிளப் நிர்வாகிகள் சக்திவேல், பிரதீப், நிவேதா, திருச்சி அஸ்ட்ரோ கிளப் தலைவர் ஜெயபால், ஆகியோர் வானியல் வள பயிற்றுநர்களுக்கு டெலஸ்கோப் கையாளுதல் குறித்து செயல் விளக்கத்துடன் பயிற்சி அளித்தனர். இதில் டாஸ் மாநில செயற்குழு உறுப்பினர்கள், மாதிரி பள்ளிகளின் வானியல் வள பயிற்றுநர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் கோவை அஸ்ட்ரோ கிளப் செயலாளர் சாய்லட்சுமி நன்றி கூறினார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அன்னை வேளாங்கண்ணி கெபி 44-வது ஆண்டு திருவிழா : தூத்துக்குடியில் கோலாகலத் தொடக்கம்!
சனி 29, ஆகஸ்ட் 2026 9:22:58 PM (IST)

மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைத்தீர்க்கும் நாள் : நலதிட்ட உதவிகளை ஆட்சியர் வழங்கினார்!
சனி 29, ஆகஸ்ட் 2026 5:43:26 PM (IST)

மூதாட்டியைக் கட்டிப்போட்டு 44 கிராம் நகை பறிப்பு : பக்கத்து வீட்டுப் பெண் உட்பட 2 பேர் கைது!
சனி 29, ஆகஸ்ட் 2026 5:14:03 PM (IST)

பெண்ணைக் கொன்று வேக வைத்த கொடூர தம்பதி கைது: விசாரணையில் பகீர் தகவல்கள்!
சனி 29, ஆகஸ்ட் 2026 4:39:35 PM (IST)

விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்துக: தமிழக அரசுக்கு தேமுதிக வலியுறுத்தல்!
சனி 29, ஆகஸ்ட் 2026 10:50:02 AM (IST)

அஞ்சல்துறையில் 2,095 பணியிடங்கள்: பத்தாம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!
சனி 29, ஆகஸ்ட் 2026 10:34:39 AM (IST)


