» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

நம் சமூகத்திற்கு மீட்சியாக இருப்பவை கலைகளே: கனிமொழி கருணாநிதிபேச்சு!!

வியாழன் 25, ஏப்ரல் 2024 10:49:54 AM (IST)



வெறுப்புவாத அரசியலில் சிக்கித் தவிக்கும் நம் சமூகத்திற்கு மீட்சியாக இருப்பவை கலைகளே! என்று கனிமொழி கருணாநிதி பேசினார். 

சென்னை க்ரீம்ஸ் சாலையில் உள்ள லலித் கலா அகாடமியில் நீலம் பண்பாட்டு மையம் சார்பில் நடைபெற்ற வானம் கலை விழா - வேர்க்கோடுகள் விருது வழங்கும் நிகழ்வில் திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி கருணாநிதி மற்றும் இயக்குநர் பா.ரஞ்சித் ஆகியோர் கலந்து கொண்டனர்.

நிகழ்வில் பேசிய கனிமொழி கருணாநிதி: கலைகளும் அரசியலும் எப்போதும் ஒருமித்த பயணத்தை மேற்கொள்வதில்லை. தற்போது மிகப்பெரிய பதவிகளில் இருப்பவர்கள் வெறுப்பு பேச்சுகளைப் பேசிவரும் நிலையில் கலைகள் அன்பைக் கொடுக்க கூடிய ஒன்றாக உள்ளது. சக மனிதன் காட்டும் அன்பு மட்டும் தான், இந்த நாட்டில் உள்ள சமூகத்தை நாம் காப்பாற்ற முடியும் என்று பேசினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory