» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரணம் வழங்க கோரிக்கை!!

புதன் 24, ஏப்ரல் 2024 10:22:10 AM (IST)



தூத்துக்குடியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழக முதல்வர் அறிவித்த நிவாரணம் 4 மாதங்களுக்கு மேல் ஆகியும் வழங்கப்படவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 

கடந்த ஆண்டு டிசம்பர் 17,18 ஆகிய தேதிகளில் தூத்துக்குடி மாவட்டம் உள்பட சில மாவட்டங்களில் பெய்த கனமழையால் அனைத்து தரப்பினரும் கடுமையாக மழை வௌ்ள பாதிப்பால் பாதிக்கப்பட்டனர். அதில் குறிப்பாக பல வியாபாாிகள் தங்களது பொருட்களை முழுமையாக இழந்து அவதிக்குள்ளாகினார்கள். அதே போல் மாநகராட்சி பகுதி மட்டுமின்றி மாப்பிள்ளையூரணி ஊராட்சி உள்ளிட்ட பல மாவட்டங்களின் பல பகுதிகளில் ஏற்பட்ட பாதிப்பினால் 52 பேர் உயிாிழப்பை சந்தித்தும் கால்நடைகளும் செத்து மிதந்தன. 

பொதுமக்கள் சாராசாி நிலைக்கு வருவதற்கு குறைந்த பட்சம் இரண்டு மாதங்கள் ஆகின. வௌ்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு போர்கால அடிப்படையில் பணிகளை மேற்கொள்ள தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டதின் போில் தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா, கனிமொழி எம்.பி, அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், நேரு, கீதாஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன், தங்கம் தென்னரசு, பொியசாமி, பொியகருப்பன், ராமசந்திரன், மனோ தங்கராஜ், சக்கரபாணி, மேயர் ஜெகன் பொியசாமி, உள்ளிட்ட பல அதிகாாிகள் முழுமையாக முகாமிட்டு பணிகளை மேற்கொண்டனர்.

இதற்கிடையில் முதலமைச்சரும் நோில் வந்து பார்வையிட்டார். ஆளும் கட்சி பிரமுகர்கள் உள்ளாட்சி பிரதிநிதிகள் அதிகாாிகள் என அனைத்து தரப்பினர் என ஓட்டுமொத்தமாக இணைந்து பணியாற்றி தூத்துக்குடி மாவட்டத்தில் மக்கள் பணி செய்தனர். பாதிக்கப்பட்ட அனைத்து பகுதிகளையும் ஆய்வு மேற்கொண்டு அரசு சார்ந்த உதவிகளை எந்த முறையில் யாருக்கெல்லாம் வழங்கலாம் என்ற கணக்கெடுப்பு உயர்மட்ட அதிகாாிகள் முதல் கிராமத்தில் உள்ள தலையாாி வரை எடுக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட வியாபாாிகளுக்கு வங்கிகள் மூலம் சில லட்சங்கள் வரை வழங்குவதற்கு முதலமைச்சர் நடவடிக்கை மேற்கொண்டார். 

அதே போல் தூத்துக்குடி, நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களில் பாதிக்கப்பட்டவர்களின் பட்டியல் தயாாிக்கப்பட்டு அதனடிப்படையில் முதலமைச்சர் ஸ்டாலின் தூத்துக்குடிக்கு நோில் வந்து நலத்திட்ட உதவிகளை தொடங்கி வைத்து பேசுகையில் "முழுமையாக வீடு இழந்தவர்களுக்கு 4 லட்சமும் சேதமடைந்தவர்களுக்கு இரண்டு லட்சமும், வழங்கப்படுகிறது இது பாரபட்சமின்றி அனைவருக்கும் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டு சென்றார். இதில் ஊராட்சி உள்ளிட்ட கிராமப்புறங்களுக்கென அதிகாாிகள் தனியாகவும் நகர்புறத்திற்கென அதிகாாிகள் என தனியாகவும் பணியை மேற்கொண்டனர். 

ஆனால் 4 மாதங்கள் ஆகியும் இன்று வரை தூத்துக்குடி மாநகராட்சி பகுதி ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மாப்பிள்ளயைூரணி ஊராட்சி உள்ளிட்ட பல பகுதிகளில் பாதிக்கப்பட்டு முழுமையாக வீடுகளை இழந்தும் சேதமடைந்த குடும்பத்தினருக்கு முறையாக அரசின் உதவித்தொகை வழங்காமல் இன்று வரை பொதுமக்களை அலைக்கழித்து வருகின்றனர். பாதிக்கப்பட்ட மக்கள் உள்ளாட்சி பிரதிநிதிகளிடம் தொடர்ந்து கோாிக்கை வைத்து வருகின்றனர். 

மேலும், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து தொடங்கி வைத்த போிடர் கால நிவாரண உதவித்தொகையை கூட தூத்துக்குடி மாவட்டத்தில் முறையாக வழங்காமல் மக்கள் நலனில் அக்கறை இல்லாமல் செயல்படும் அதிகாாிகளை கண்டித்து பல்வேறு தரப்பினர் போராட்டம் நடத்த உள்ளதாக தெரிகிறது. எனவே வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory