» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

த.வெ.க. தலைவர் விஜய் வாக்களித்தார்: கூட்ட நெரிசலில் சிக்கியதால் பரபரப்பு !

வெள்ளி 19, ஏப்ரல் 2024 12:52:05 PM (IST)



நீலாங்கரை தொகுதியில் த.வெ.க. கட்சியின் தலைவர் நடிகர் விஜய் வாக்களிக்க வந்தபோது கடும் கூட்ட நெரிசல் நிலவியதால் பரபரப்பு ஏற்பட்டது. 

இன்று காலை 7 மணிக்குத் தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணிக்கு நிறைவடையவிருக்கிறது. தெற்கு, வடக்கு, மத்திய சென்னை என மூன்று தொகுதிகளிலும் 20 முதல் 22 சதவீத வாக்குகள்தான் 11 மணி வரை பதிவாகியுள்ளன. திரைப்பிரபலங்கள் பலரும் காலையிலேயே தங்களது வாக்கினை பதிவிட்டனர்.

இந்நிலையில் ரஷியாவில் இருந்து சென்னை திரும்பிய நடிகர் விஜய் நீலாங்கரையில் உள்ள வாக்குச் சாவடியில் வாக்களித்தார். வெள்ளை நிற ஆடை உடுத்தி வந்துள்ளார். கட்சி தொடங்கியபின் முதன்முறையாக வாக்களித்துள்ளார். கையில் காயத்துடன் வாக்களித்ததுள்ளார்.  முன்னதாக அவர் வாக்களிக்க வந்தபோது அங்கு கூடியிருந்த ரசிகர்களின் தள்ளுமுள்ளு கூட்டத்தால் திணறிப்போனார் விஜய். 

லியோ படத்தைத் தொடர்ந்து விஜய்யின் 68-வது படத்தை வெங்கட் பிரபு இயக்கி வருகிறார். தற்போது வெளிநாட்டில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.கோட் படத்தின் படப்பிடிப்பு 80 சதவிகிதம் முடிவடைந்து இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கோட் படத்தின் படப்பிடிப்புக்குப் பிறகு விஜய் கட்சி நிர்வாகிகளை சந்திக்கவிருக்கிறார். தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை உருவாக்கியுள்ள விஜய் வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிட இருக்கிறார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory