» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தனியார் கல்குவாரியில் வெடி விபத்து: 4 பேர் உடல் சிதறி உயிரிழப்பு

புதன் 1, மே 2024 11:20:14 AM (IST)

காரியாபட்டி அருகே தனியார் கல்குவாரியில் ஏற்பட்ட வெடி விபத்தில் சிக்கி 4 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர்.

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே ஆவியூர் - கீழஉப்பிலிக் குண்டு சாலையில் இயங்கி வந்த தனியார் கல்குவாரியில் வெடி விபத்து ஏற்பட்டது. பாறைகளை உடைக்க பயன்படுத்தப்படும் வெடி மருந்துகளை, குவாரி அருகே உள்ள அறையில் இறக்கியபோது எதிர்பாராத விதமாக வெடிமருந்துகள் வெடித்து சிதறின.

இந்த விபத்தில் சிக்கி 4 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தனர். 2 வாகனங்கள் முற்றிலும் சேதமடைந்தன. சம்பவ இடத்தில் வெடிமருந்துகள் இருப்பதால் தீயணைப்புத் துறையினர், போலீசார் செல்ல முடியால் உள்ளனர். வெடி விபத்தால் அப்பகுதியை சுற்றி 20 கிலோ மீட்டர் தூரம் வரை அதிர்வுகள் ஏற்பட்டு வீடுகள் சேதமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் கல்குவாரியில் தொழிலாளர்கள் பலர் சிக்கியிருப்பதால் உயிரிழப்பு அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது. கல் குவாரியை மூட வலியுறுத்தி கடம்பன்குளம் கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கல்குவாரியில் ஏற்பட்ட வெடிவிபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory