» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

இந்தியா கூட்டணிக்கு வாக்களியுங்கள் : வேட்டையன் பட இயக்குநர் த.செ.ஞானவேல்!

புதன் 17, ஏப்ரல் 2024 4:25:37 PM (IST)

மக்களவைத் தேர்தலில் இந்தியா கூட்டணிக் கட்சிகளுக்கு வாக்களியுங்கள் என்று திரைப்பட இயக்குநர் த.செ.ஞானவேல் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

சூர்யா நடிப்பில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்ற ஜெய்பீம் படத்தின் இயக்குநர் ஞானவேல், தற்போது ரஜினியின் வேட்டையன் படத்தை இயக்கி வருகிறார். இந்த நிலையில், மக்களவைத் தேர்தலில் இந்தியா கூட்டணிக் கட்சிகளுக்கு மக்கள் வாக்களிக்குமாறு வேண்டுகோள் விடுத்து ஞானவேல் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

ஞானவேல் வெளியிட்ட பதிவு: "வாக்குரிமை என்பது என் உரிமைகளைக் காத்து, உணர்வுகளைப் புரிந்து ஆட்சி செய்கிற ஆட்சியாளர்களைத் தேர்ந்தெடுக்கும் சமூகக் கடமை. வருங்கால தலைமுறையினருக்கு வெறுப்பு நிலவாத, சக இந்தியர்களின் தனித்துவத்தை மதிக்கிற பாதுகாப்பான சூழலை அமைத்து தருவது நமது தார்மீக கடமை.

இந்தியா கூட்டணி கட்சிகளின் வாக்குறுதிகள் சமூக நல்லிணக்கத்தையும், சமூக நீதியையும் காப்பாற்றும் என்கிற நம்பிக்கை அளிக்கின்றன. மாநில உரிமை, மொழி உரிமை, கருத்து உரிமை, கல்வி உரிமை போன்ற அடிப்படை உரிமைகளை மீட்டெடுப்பதும், காத்துக் கொள்வதும் அவசியம்.

அதன் அடிப்படையில் தி.மு.க., காங்கிரஸ், இடதுசாரிகள், விடுதலை சிறுத்தைகள் உள்ளடக்கிய இந்தியா கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களுக்கு வாக்களிக்கும்படி நானறிந்த, என்னை அறிந்த அனைவரிடமும் கேட்டுக்கொள்கிறேன்." எனத் தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து

TrinitonApr 18, 2024 - 05:10:10 PM | Posted IP 172.7*****

Nee thi.kaa.... so apadithan solluveda..

இவனுங்கApr 18, 2024 - 09:11:37 AM | Posted IP 172.7*****

பூரா சினிமா பைத்தியம் பிடித்த பயலுக

TAMILANApr 17, 2024 - 06:24:52 PM | Posted IP 162.1*****

vengai vayalla nadantha issue ennachu.atha kekka mudiyala evan pesa vanthudan

என்னதுApr 17, 2024 - 05:15:57 PM | Posted IP 172.7*****

அது திருட்டு பய கூட்டணியா ?

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory