» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

வாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னங்கள் பதிவேற்றும் பணி: ஆட்சியர் ஆய்வு

புதன் 10, ஏப்ரல் 2024 4:10:35 PM (IST)



தென்காசி தொகுதியில் வாக்குப் பதிவு இயந்திரங்களில் சின்னங்கள் பதிவேற்றம் செய்யும் பணியினை ஆட்சியர் ஏ.கே.கமல் கிஷோர் ஆய்வு செய்தார். 

தென்காசி பாராளுமன்ற தொகுதியில் 15 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். தென்காசி பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு தென்காசி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் மற்றும் கடையநல்லூர் தாலுகா அலுவலகங்களில் வாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னங்கள் பதிவேற்றம் செய்யும் பணி நடைபெற்றது. 

தொகுதியில் போட்டியிடும் 15 வேட்பாளர்களின் பெயர்கள் அவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட சின்னங்கள் மற்றும் நோட்டா ஆகியவை பதிவேற்றும் பணி நடைபெற்றது. இப்பணியை தென்காசி மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும் மாவட்ட ஆட்சித்தலைவருமான ஏ.கே.கமல் கிஷோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory